மொத்தத்தில் ஒரு முறை கடலையை சுவைக்கலாம் - திரைவிமர்சனம்

சிவகார்த்திகேயன் ஸ்டைலில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வந்தவர் மா.கா.பா. ஆனந்த். இவர் நடிப்பில் தீபாவளியன்று வெளிவந்த படம் கடலை, இத...

சிவகார்த்திகேயன் ஸ்டைலில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வந்தவர் மா.கா.பா. ஆனந்த். இவர் நடிப்பில் தீபாவளியன்று வெளிவந்த படம் கடலை, இதில் ஐஸ்வர்யா இவருக்கு ஜோடியாக நடிக்க, பொண்வன்னன், யோகிபாபு, ஜான்விஜய் ஆகியோர் முக்கியமான ரோலில் நடித்துள்ளனர்.
கதைக்களம்

பொண்வன்னனின் மகன் மா.கா.பா, தமிழ் சினிமாவில் வரும் வழக்கமான ஹீரோவை போல் எந்த வேலையும் செய்யாமல் ஊர் சுற்றி வருகிறார்.

தன் மகனை எப்படியாவது விவசாயத்திற்கு கொண்டு வரவேண்டும், அது சம்மந்தமாக படிக்க வைக்க வேண்டும் என்று பொண்வன்னன் எண்ணுகிறார், ஆனால், மா.கா.பா அதையெல்லாம் கேட்கமால் ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார்.

ரியல் எஸ்டேட் செய்யும் ஜான் விஜய் 500 ஏக்கர் விவாசய நிலங்களை ஆக்ரமிக்க எண்ண, இதை பொண்வன்னன் தடுக்க நினைக்கின்றார்.

ஆனால், தன் கையை வைத்து தன் கண்ணை குத்தும் கதையாக மா.கா.பாவை பகடை காயாக ஜான் விஜய் பயன்படுத்த பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்

மா.கா.பா ஒரு நடிகனாக இந்த படத்தில் கொஞ்சம் முன்னேறிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும், ஆட்டம், பாட்டம் என கலக்குகிறார்.

ஐஸ்வர்யா ராஜேஸிற்கு பெரிதும் சொல்லும்படி கதாபாத்திரம் இல்லை, ஆனால், யோகி பாபு தான் படத்தின் இரண்டாவது ஹீரோவே என்று சொல்லி விடலாம்.

இவர் திரையில் தோன்றினாலே ஆடியன்ஸ் சிரிக்கத்தொடங்கி விடுகின்றனர், தன் ஒன் லைனால் செம்ம அப்லாஸ் வாங்குகிறார்.

சாமின் இசையில் பின்னணி சூப்பர், பாடல்கள் மனதில் நிற்கவில்லை, ஒளிப்பதிவு கவர்கிறது.
க்ளாப்ஸ்

நடிகர், நடிகைகளின் யதார்த்தமான நடிப்பு குறிப்பாக யோகி பாபு.

படத்தின் முதல் பாதி மற்றும் மெசெஜ்.
பல்ப்ஸ்

இரண்டாம் பாதியில் கொஞ்சம் திரைக்கதை தடுமாறுகின்றது.

மொத்தத்தில் ஒரு முறை கடலையை சுவைக்கலாம்

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About