சினிமா
திரைவிமர்சனம்
ரெமோ - திரைவிமர்சனம்
October 07, 2016
ரெமோ பூஜை போட்ட அன்றே எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டிய படம். சிவகார்த்திகேயன் கிட்டத்தட்ட விஜய், அஜித்திற்கு அடுத்த இடத்திற்கு வந்துவிட்டார். போஸ்டர், ட்ரைலர், பாடல்கள் என அனைத்தும் ஹிட் அடிக்க, இன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளிவந்துள்ளது இந்த ரெமோ.
அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் அனிருத் இசையில், சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு என நட்சத்திரக் கூட்டணியில் வெளிவந்துள்ள இந்த ரெமோ சிவகார்த்திகேயனை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றதா? பார்ப்போம்.
கதைக்களம்
தமிழ் சினிமாவின் தொன்று தொட்டு வரும் கதைக்களம் தான், ஹீரோயினை ஹீரோ எப்படி காதலிக்க வைக்கின்றார் என்பதே ஒன் லைன். இதில் கொஞ்சம் அவ்வை சண்முகியை அடித்துவிட்டுள்ளார் அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன்.
சிவகார்த்திகேயன் ரஜினி போல் ஆகவேண்டும் என்று முயற்சி செய்ய, அந்த தருணத்தில் கீர்த்தி சுரேஷை பார்க்கிறார். கீர்த்தி சுரேஷ் ஒரு டாக்டர், ஒரு ஆடிஷன் முடிந்து சிவகார்த்திகேயன் நர்ஸ் கெட்டப்பில் வரும் போது இவரை உண்மையாகவே கீர்த்தி நர்ஸ் என்று நம்புகிறார்.
அதே நேரம் கீர்த்திக்கு வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்நிலையில் எப்படி கீர்த்தி மனதில் சிவகார்த்திகேயன் இடம்பிடிக்கின்றார் என்பதை செம்ம கலகலப்பாக கூறியுள்ள படம் தான் இந்த ரெமோ.
படத்தை பற்றிய அலசல்
சிவகார்த்திகேயன் ஒன் மேன் ஷோ என்றே கூறிவிடலாம். அதிலும் நர்ஸ் கெட்டப்பில் ஆண்களே ஜொல்லு விட்டாலும் ஆச்சரியம் இல்லை, குரல் கூட மாற்றி பேசியிருக்கிறார், ரசூல் பூக்குட்டிக்கு தான் இந்த பாராட்டு.
கீர்த்தியை காதலிக்க வைக்க அவர் எடுக்கும் முயற்சிகள் செம்ம கலாட்டா. சிவகார்த்திகேயன் தனக்கு எது வரும் என்பதை மிகவும் தெளிவாக தெரிந்து வைத்துள்ளார். எத்தனை சீரியஸாக சென்றாலும் தன் ஒன் லைன் காமெடி மூலம் அதை ஈடுக்கட்டி சிரிக்க வைத்துள்ளார். ஆடல், பாடல், ஆக்ஷன் என அனைத்து ஏரியாவிலும் கலக்கிவிட்டார்.
கீர்த்தி சுரேஷ் இதுவரை வந்த படங்களிலேயே மிக அழகாக இருக்கின்றார். என்ன தமிழ் சினிமாவின் பாரம்பரிய ஹீரோ எது சொன்னாலும் நம்பி ஏமாறும் ஒரு கதாபாத்திரம் தான்.
யோகிபாபு, சதீஷ், மொட்டை ராஜேந்திரன் என பலரும் காமெடியில் கலக்கியுள்ளனர். அதிலும் யோகிபாபு நர்ஸ் சிவகார்த்திகேயனை துரத்தி துரத்தி காதலிக்கும் இடம் மற்றும் கிளைமேக்ஸில் நர்ஸை காணவில்லை என்று PK ஸ்டைலில் அலையும் இடமெல்லாம் செம்ம ரெஸ்பான்ஸ்.
அனிருத் பாடல்களை விட பின்னணி இசையில் மயக்குகிறார். PC ஸ்ரீராம் அவர்களின் ஒளிப்பதிவு ஏதோ பாலிவுட் படங்கள் பார்த்தது போல் உள்ளது. ஆனால், கொஞ்சமாவது லாஜிக் என்பதை பார்த்திருக்கலாம். இரவு 12 மணிக்கு வந்தால் கூட சிவகார்த்திகேயன் நர்ஸ் கெட்டப்பில் வருவதெல்லாம் ஓவர் சார். மேலும், இன்னும் ஆண்கள் நாங்க இப்படி, அப்படி என தொடர்ந்து சிவகார்த்திகேயன் படங்களில் வசனங்கள் வருவதை கொஞ்சம் மாற்றலாம்.
க்ளாப்ஸ்
சிவகார்த்திகேயன் முன்பே சொன்னது போல் ஒரே ஆளாக படத்தை தாங்கி செல்கிறார்.
யோகி பாபு, சதீஷ், மொட்டை ராஜேந்திரன், சரண்யா பொன்வண்ணன் ஆகியோரின் காமெடி கலாட்டா.
அனிருத்தின் இசை, மற்றும் PC ஸ்ரீராம் அவர்களின் ஒளிப்பதிவு.
பல்ப்ஸ்
லாஜிக் அத்துமீறல், ஒரு மிடில்கிளாஸ் பையன் காதலுக்காக எப்படி இத்தனை செலவு செய்வான் என்று தெரியவில்லை. கதையில் முக்கியத்துவம் இல்லை, பொழுதுபோக்குக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.
மொத்தத்தில் இந்த ரெமோ விட்ட அம்பு சரியாக பாக்ஸ் ஆபிஸ் மீது பாய்ந்துள்ளது.

0 comments