அதிமுகவில் அஜீத்? இந்த களேபரத்துக்கு நடுவுல இது வேறயா?

அஜீத்தின் பிறந்த நேரத்தை கணித்திருக்கும் ஜோதிடர்கள் பலரும், அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்று கூறிவருவது இன்று நேற்று தகவல் அல்ல....

அஜீத்தின் பிறந்த நேரத்தை கணித்திருக்கும் ஜோதிடர்கள் பலரும், அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்று கூறிவருவது இன்று நேற்று தகவல் அல்ல. கடந்த பத்தாண்டு கால பரபரப்பு. ஆனால் அவருக்கு இருக்கும் மூட் மற்றம் கள நிலவரங்களை ஆராய்ந்தால், கொசு குறுக்கே பறந்தால் கூட “கொன்னுபுடுவேன் படவா…” என்கிற அளவுக்கு சூடு பார்ட்டி! ஆனாலும் காலம் அப்படிதான் தீர்மானித்திருந்தால் அதை யாரால் மாற்ற முடியும்?

அவருக்கும் அதிமுக தலைமையான அம்மாவுக்கும் எப்போதும் மகன் அம்மா பாசம் உண்டு. அஜீத்தின் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்திய ஜெயலலிதா, அதை பார்மாலிடியாக கருதாமல் உள்ளன்போடு நின்றதை இப்போதும் புகைப்படங்களில் கண்டு மகிழும் அஜீத் பேன்ஸ் வட்டாரம். அதற்கேற்றது போல, திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி முன்னிலையிலேயே “மிரட்றாங்கய்யா…” என்ற அஜீத்தின் பேச்சு, வரலாற்றின் மிக மிக முக்கியமான தருணம். அப்போதே அவர் அம்மாவின் ஆள். அதனால்தான் அப்படி பேசினார் என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன.

அம்மாவுக்கு பிறகு அதிமுக வே அஜீத்துக்குதான் என்பது போல, கதை விட்ட பலரும் இப்போதும் இது நடந்து விடாதா என்று காத்திருக்கிற நேரத்தில்தான் அந்த பரபரப்பு கிளம்பிவிட்டது. கேரளாவிலிருந்து வெளிவரும் சில ஊடகங்களில் பரபரப்பான செய்திகளை வெளியிட்டிருக்கிறார்கள். மருத்துவமனையில் இருக்கும் முதல்வர் ஜெயலலிதா அஜீத்தை நேரில் பார்த்து பேச ஆசைப்பட்டதாக கூறுகிறது அந்த செய்தி. அவர்கள் சொல்வதை போல ஒரு வேளை அஜீத் மருத்துவமனைக்கு சென்று முதல்வரை பார்த்தால் என்னாகும்?

அதற்கப்புறம் அரசியல் வானத்தில் சூரியனை மறைத்துக் கொண்டு நட்சத்திரமும் மின்னப் பார்க்கும்!

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About