இரட்டை வேடங்களில் இவர்கள் தான் பெஸ்ட்!ஐ எம் எ ஹீரோ .., ஐ எம் எ வில்லன்!

தமிழ்சினிமாவில் பொதுவாக டபுள் ரோல் படங்களில் ஒருவர் வில்லனாகவும் இன்னொருவர் நல்லவராகவுமே நடித்திருக்கிறார்கள். அதாவது விஸ்வரூபத்தில் கமல் ச...

தமிழ்சினிமாவில் பொதுவாக டபுள் ரோல் படங்களில் ஒருவர் வில்லனாகவும் இன்னொருவர் நல்லவராகவுமே நடித்திருக்கிறார்கள். அதாவது விஸ்வரூபத்தில் கமல் சொல்வாரே " ஐ எம் எ ஹீரோ .., ஐ எம் எ வில்லன்! " அப்படி!. அதில் மறக்க முடியாத சில இரட்டை வேட படங்களின் ஃப்ளாஷ்பேக்...

வாலி :

இரட்டை வேட

காது கேட்காத, வாய் பேசாத அஜித்தை இப்போது  நினைத்துப் பார்க்க முடியுமா?. ஆனால், அஜித்தை ஆசம் ஹீரோவாக மாற்றிய வாலியில் அதுதான் ‘தல’ அவதாரம். ராமாயண கிளைக்கதை ஒன்றை அடிப்படையாக கொண்ட வாலியில் அஜித்துக்கு இரண்டு வேடங்கள். அண்ணன் ஜீவா. சிவா தம்பி. சிவா, சிம்ரனை துரத்தி துரத்தி காதலித்துக் கொண்டிருக்க, ஜீவாவும் சிம்ரனை ஒரு தலையாக காதலிப்பார். ஆனால் கல்யாணம் தம்பி சிவாவுடன் நடந்துவிட தனக்குள்ளேயே பொருமிக் கொண்டு ஒரு வில்லனாக வெரைட்டி விருந்து வைத்திருப்பார் அஜித்.

கத்தி :

சூப்பர்ஸ்டாரின் சூப்பர் ஹிட் படமான ‘ராஜாதி ராஜா’வின் சாயல் கொண்டது கத்தி. அப்படியே பின்னால் போனால், ராஜாதி ராஜாவுக்கும் ஒரு ரெஃபரன்ஸ் இருக்கலாம். ரொம்ப நல்லவன், ஆனால் ஆக்‌ஷன் தெரியாத ஒரு ஹீரோ. தப்பான ரூட்டில் செல்லும் கொஞ்சம் நல்லவன் ஆனால் அதிரடி ஆக்‌ஷன் இன்னொரு ஹீரோ. நல்லவனுக்கு ஒரு சிக்கல் என்றதும் ஆக்‌ஷன் ஹீரோ களமாடுவதுதான் திரைக்கதை. கத்தி என்கிற கதிரேசனும், ஜீவா என்கிற ஜீவானந்தமும் விஜய் கரியரில் ஏற்றியது விளக்கல்ல; பவர்ஃபுல் சோடியம் வேப்பர்.

 அமைதிப்படை:

ஹீரோ வெயிட்டாக தெரிய வேண்டுமென்றால் வில்லன் ’அப்படி’ இருக்க வேண்டும் என்பார்கள் சினிமாக்காரர்கள். அப்படி ஒரு வில்லனாகவும், அவரை வெல்லும் ஹீரோவாகவும் நடித்து அதிரடி ஆட்டம் ஆடியிருப்பார் சத்யராஜ். அமாவாசையை மறந்து தமிழ் சினிமாவையே எழுத முடியாது. இரட்டை வேட படங்களை மட்டும் எழுதிவிட முடியுமா?

இந்தியன் :

”மகனை கொல்ல தயாராகிவிட்ட அப்பா” இந்த க்ளைமேக்ஸில் இருந்து ரிவர்ஸில் தான் ஸ்க்ரிப்ட் எழுதியிருப்பாரோ ஷங்கர்? எதுவாக இருந்தாலும் நேர்வழி என்பார் அப்பா. எல்லாவற்றுக்கும் ஷார்ட் கட் கண்டுபிடிப்பார் மகன். இந்த வித்தியாசங்களை வெளிக்காட்ட கமலை விட்டால் வேறு யாரால் முடியும்?

நெற்றிக்கண் :

1981 இல் எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த படம் நெற்றிக்கண். காலையில் கண்களை திறக்கும் போதே அங்கு பெண்ணின் படம் இருக்கவேண்டும் என நினைக்கும் சபலப்புத்தி பணக்காரர் சக்கரவர்த்தி. அசால்ட்டான அதே சமயம் திமிரான அந்த மேனரிசம் சான்ஸே இல்லை.அவருடைய மகன் சந்தோஷ். ஆனால் மகன் ரஜினிக்கு சும்மா வந்து போகும் கதாபாத்திரம் தான். முழுக்க முழுக்க அப்பா ரஜினியே அப்லாஸ் அள்ளியிருப்பார். டிராமா டிக்கெட் விற்க வரும் பெண்ணை சந்திக்கும் முன் சென்ட் அடித்துக் கொள்வது, மீசையை சரி செய்து கொள்வது என அந்த பெண்ணை இம்ப்ரெஸ் செய்ய தயாராகும் அந்த சீனில் ரஜினியின் அந்த ஸ்டைல் வேற லெவல்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About