உங்கள் வாட்ஸ் அப் க்ரூப்பில் ஈசியா தீவிரவாதிகள் இணைய முடியும்?! உஷார்!

வாட்ஸ்ஆப்பில் முன்பு ஒரு குழுவில் யாராவது இடம் பெற வேண்டுமானால், அந்த குழுவின் ‘அட்மின்’ மட்டுமே புதிய நபரை இணைக்க முடியும். இதில் பெரும்பா...

வாட்ஸ்ஆப்பில் முன்பு ஒரு குழுவில் யாராவது இடம் பெற வேண்டுமானால், அந்த குழுவின் ‘அட்மின்’ மட்டுமே புதிய நபரை இணைக்க முடியும். இதில் பெரும்பாலும் தவறான மனிதர்களை, அறிமுகம் இல்லாத நபர்களை இணைப்பதற்கு வாய்ப்பு குறைவுதான். அதனால் வாட்ஸ் ஆப்பில் குழுக்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் சரியானதாகவும், பயனுள்ளதாகவும் அமைந்தது. தற்போது வாட்ஸ் ஆப்பில் INVITE TO GROUP VIA LINK என்ற லிங்க் கொடுப்பதன் மூலம் குழுவில் விருப்பமுள்ளோர் யாரும் இணைந்து கொள்ளும் வசதி புதிதாக அறிமுகமாகியுள்ளது.

INVITE TO GROUP VIA LINK என்ன சொல்கிறது தெரியுமா… ANYONE WITH WHATSAPP CAN FOLLOW THIS LINK TO JOIN THIS GROUP. ONLY SHARE IT WITH PEOPLE YOU TRUST என்கிறது. வாட்ஸ்ஆப்பில் ஒரு குழுவையும், அதற்குறிய லிங்க்கையும் உருவாக்கி விட்டால், அந்த குழுவின் லிங்க் யாருக்கெல்லாம் கிடைக்கப் பெறுகிறதோ, அவர்கள் அந்த லிங்கை பின்தொடர்ந்து தானாகவே இணைந்து கொள்ளலாம். குழு நிர்வாகி அனுமதியின்றி. அதேநேரத்தில், உருவாக்கப்படும் குழு அழைப்பு லிங்கை, உங்களுக்கு நம்பிக்கையானவர்களிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ளுங்கள் என்று சொல்கிறது வாட்ஸ்ஆப்.

ஒரு குழுவின் அழைப்பு லிங்க் உங்களுக்கு சமூக வலைத்தளங்களின் மூலம் கிடைக்கிறது. அந்த குழு எதைப் பற்றியது, அதன் நோக்கம் என்ன, அனுப்பியது யார், இதில் இணைவதால் நமக்கு என்ன பயன் என்ற அடிப்படை கேள்விகளை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். அதாவது அழைப்பு லிங்கில் ஓரிரு வார்த்தையில், இந்த குழு இதை பற்றியது என்று தெரிவித்திருந்தால் உங்களுக்கு தொடர்பில்லையெனில் அந்த குழுவில் இணைவதை தவிர்ப்பது நல்லது.
ஹேக்கர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும், சமூக விரோதிகளுக்கும் இந்த ‘லிங்க்’ பாலம் அமைத்து கொடுக்கிறது. ஆம், இவர்களளுடைய டார்கெட் ஒரு லிங் அனுப்பினால் போதும், சட்டென்று இணைவதற்கு அதிகமானோர் காத்திருப்பது தான். அப்படி இணைந்தவுடன் ஹேக்கர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா… என்னை வேறு குழுவிலும் இணைத்து விடுங்கள் நண்பர்களே என தொலைபேசி எண்ணுடன் ஒரு லிங்க் அனுப்புவார்கள். விபரீதம் புரியாமல் அந்த குழுவில் உள்ள அனைவரும் மற்ற குழுக்களில் ஹேக்கர்களின் எணண்களை இணைத்து விடுவார்கள்.

இப்படி செய்வது மிகப்பெரிய தவறு.
யாரென்றே தெரியாத ஒருவர் அனுப்பும் லிங் மூலம் இணையும்போது, அவர் ஒரு ஹேக்கராகவோ அல்லது தீவிரவாதியாகவோ இருந்தால் உங்கள் மொபைல் போனை முழுமையாக தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். இதன் மூலம் உங்களுடைய தகவல்களுக்கும் ஆபத்து நேரலாம். அதனால் முன்னரே யோசித்துவிட்டு பின்பு லிங்க் இணைப்பில் இணையலாமா, வேண்டாமா என முடிவெடுங்கள்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About