ஐயோ போச்சே! கருப்புப் பணத்தால் கதறும் நடிகர்கள்! கோடம்பாக்கத்தில் குய்யோ முய்யோ!

ஒரு பிளாஷ்பேக்! பிரபலமான அந்த பிரமாண்ட இயக்குனர் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தது வருமான வரித்துறை. தேடித் தேடி கைப்பற்றியதெல்லாம் ஏராளமான ...

ஒரு பிளாஷ்பேக்! பிரபலமான அந்த பிரமாண்ட இயக்குனர் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தது வருமான வரித்துறை. தேடித் தேடி கைப்பற்றியதெல்லாம் ஏராளமான கருப்புப்பணம். பல கோடிகள் மதிப்பிலானது. பேஸ்த் அடித்து நின்ற அந்த இயக்குனரிடம், “ஒரு பைசா கொள்ளையடிச்சா தப்பில்ல. ஒரு ஒரு பைசவாவா ஒரு கோடி ரூபாய் கொள்ளையடிச்சா தப்புதானே?” என்று கேட்க, பதில் சொல்ல முடியாமல் கையை பிசைந்தார் அவர். படத்தில் அதிகாரிகள் பற்றி அவர் வைத்த சில டயலாக்குகள்தான் அந்த ரெய்டுக்கே காரணம் என்றெல்லாம் அப்போது பேசப்பட்டது.

தமிழ்சினிமாவில் தயாரிப்பாளர்கள் கொடுப்பதும் கருப்புப்பணம்தான். நடிகர்கள் கையை நீட்டி வாங்குவதும் கருப்புப்பணம்தான். பாதி கருப்பு, பாதி வெள்ளை என்ற தத்துவத்தை மீறி யாரும் படமெடுப்பதுமில்லை. யாரும் நடிப்பதுமில்லை. நல்லா படிச்ச ஆடிட்டர்கள் துணையோடு தப்பி வந்தவர்கள், மூட்டை மூட்டையாக 1000 மற்றும் 500 ரூபாய் தாள்களை கட்டி பதுக்கி வைத்திருக்கிறார்கள்.

ஒரு காமெடி நடிகருக்கு நல்ல பழக்கம் ஒன்று இருந்தது. தான் சம்பாதித்த பணத்தையெல்லாம் நிலத்தில் போட்டு ஏமாந்தது போக, மிச்சத்தை கட்டு கட்டாக ஒரு ரகசிய இடத்தில் பதுக்கி வைத்திருப்பார். வாரம் ஒரு நாள் அந்த அறையை திறந்து அவ்வளவு பணத்தையும் ஆசை தீர பார்த்துவிட்டு மறுபடியும் கதவை பூட்டிக் கொள்வார். மார்க்கெட்டிலிருந்து ஒதுங்கி வீட்டிலேயே பிடிவாதமாக இருந்த காலத்திலும் தினந்தோறும் இந்த ரகசிய அறையை திறந்து மகிழ்வது அவரது வாடிக்கைகளில் ஒன்றாக இருந்தது. மோடியின் இந்த அறிவிப்பு வந்த நாளில், நெஞ்சடைப்பே வந்துவிட்டதாம் அவருக்கு. இரவெல்லாம் ஃபுல் ஃபுல்லாக இறங்கியதாக கூறுகிறார்கள். எப்படி எல்லாத்தையும் மாற்றப் போகிறாரோ?

வெள்ளையை அப்பாகிட்ட டிடியா கொடுத்துருங்க. கருப்பை என் ஈசிஆர் பங்களாவுக்கு அனுப்பிடுங்க என்று பகுமானமாக பங்கு பிரிக்கும் அந்த டாப் ஹீரோவுக்கு நேற்றிரவு உறக்கம் வந்திருக்குமா? டவுட்டுதான்.

நடிகரும் கட்சித் தலைவருமான அவர், பல கோடிகளை மூட்டை மூட்டையாக கட்டிப் போட்டு வைத்திருக்கிறாராம். அதெல்லாம் நள்ளிரவில் எரிக்கப்படுமா, புதைக்கப்படுமா? தெரியாது. ஆனால் அவர் நேற்றிரவு பூட்டிய வாயை இன்னும் திறக்கவேயில்லையாம்.

இன்னும் இதுபோல ஏராளமான ஹீரோக்களும், தயாரிப்பாளர்களும், காமெடியன்களும் அமாவாசை இருட்டுல அ னா ஆ வன்னா எழுதப் பழகியதை போல திடுதிடுத்து நிற்கிறார்கள். மோடி சாபம் இப்படி மொத்தமா இறங்கிருச்சே கோடம்பாக்கத்துல?

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About