கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவது எப்படி? கூகுளை நாடிய ப்ளாக் ஷிப்ஸ்

ரூ.500 மற்றும் 1,000 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தவுடன் கறுப்பு பணத்தை, வெள்ளையாக மாற்றுவது எப்படி? என கூகுளில் அதிகம் பேர் தேடியுள்னர்....

ரூ.500 மற்றும் 1,000 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தவுடன் கறுப்பு பணத்தை, வெள்ளையாக மாற்றுவது எப்படி? என கூகுளில் அதிகம் பேர் தேடியுள்னர்.
 நாட்டில் கறுப்பு பணத்தை மீட்பதற்காக ரூ.500 மற்றும் 1,000 நோட்டுக்களை திரும்ப பெற்றுக்கொள்வதாக மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. பாராட்டுகளையும், விமர்சனங்களும் இதற்கு குவிந்து வரும் நிலையில் சத்தமே இல்லாமல் மற்றொரு சம்பவமும் நடந்துள்ளது. அதன்படி, கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றுவது எப்படி? என்பது குறித்து கூகுளில் அதிகம் பேர் தேடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


கூகுள் தகவல்படி, இதில் ஹரியானா  மாநிலத்தில் அதிகம் கறுப்பு பணத்தை மாற்றுவது குறித்து கூகுளை நாடியுள்ளனர்.  இதற்கு அடுத்தபடியாக  குஜராத், மஹாராஷ்டிரா, டெல்லி மாநிலங்கள் உள்ளன. மேலும், புழக்கத்துக்கு வந்துள்ள புதிய ரூபாய் நோட்டுகளின் சிறப்பம்சங்கள் குறித்தும் கூகுளில் அதிகம் தேடியுள்ளனர்.

மேலும் பல...

0 comments

Blog Archive

Search This Blog