அஜீத் விஜய் ஆசைப்பட்டும் நடக்காத படத்தில் லாரன்ஸ்!

ரஜினி ஒரு காலத்தில் நடித்த சூப்பர் மாஸ் படங்களை மறுபடியும் ரீமேக் பண்ணினாலே போதும்… இன்னும் ஒரு வருஷத்துக்கு கஜானாவை ஃபுல்லாக்கிவிடலாம். ஆன...

ரஜினி ஒரு காலத்தில் நடித்த சூப்பர் மாஸ் படங்களை மறுபடியும் ரீமேக் பண்ணினாலே போதும்… இன்னும் ஒரு வருஷத்துக்கு கஜானாவை ஃபுல்லாக்கிவிடலாம். ஆனால் பக்கோடா சட்டியில் பலாப்பழத்தை போட்ட மாதிரி, பொருந்தாத நடிகர்களை போட்டால் முடிந்தது மோட்சம்! முதலுக்கே நாசம்! அப்படி ஒன்றிரண்டு ரஜினி படங்களை நாசமாக்கியவர்களை விட்டுத்தள்ளுங்கள்.

ராகவேந்திரா லாரன்ஸ் மாதிரி, ரஜினியின் ஜெராக்ஸ்களே ரஜினி படத்தை ரீமேக் பண்ணினால் எவ்வளவு பொருத்தமாக இருக்கும்? அந்த அற்புதத்தை நமக்கு வழங்கப் போகிறார் அவர். யெஸ்… ரஜினியின் தெறிக்க விட்ட ஹிட் படமான மூன்று முகம் படத்தின் ரீமேக்கில் நடிக்கப் போகிறாராம் லாரன்ஸ். ஆரம்ப கட்டத்தில் இருக்கும் இந்த பேச்சு வார்த்தை, இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வரக்கூடும். அந்த படத்தை இயக்கப் போவது யார் என்கிற தகவலும் அப்போதுதான் தெரியவரும்.

ஆரம்பத்தில் ‘மூன்று முகம்’ படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆசைப்பட்ட இருபெரும் நடிகர்கள் அஜீத்தும், விஜய்யும். என்ன காரணத்தாலோ அவர்களுக்கு அந்த கொடுப்பினை இல்லை. நடுவில் சிலர், மூன்று முகம் என்கிற தலைப்பு வரைக்குமாவது கைப்பற்றி விடலாம் என்று கணக்குப் போட்டதும், அந்த கணக்கு வெறும் முட்டை கணக்கு ஆனதும் ரசிகர்கள் அறிந்ததுதான்.

லாரன்சின் இந்த மூன்று முகம் முயற்சிக்கு ஜிகிர்தண்டா படத் தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் துணை நிற்கிறாராம். நடக்கட்டும்… நல்லதே நடக்கட்டும்!

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About