மீண்டும் ஒரு தொலைக்காட்சி நடிகர் மரணம் - தொடரும் துயர சம்பவம்

 சமீபத்தில் நடிகர்கள், நடிகைகள் தற்கொலை செய்து கொள்வது மிகவும் அதிகரித்துவிட்டது. தற்போது மேலும் ஒரு இறப்பு சம்பவம் நடந்துள்ளது. மும்பை ம...

 சமீபத்தில் நடிகர்கள், நடிகைகள் தற்கொலை செய்து கொள்வது மிகவும் அதிகரித்துவிட்டது. தற்போது மேலும் ஒரு இறப்பு சம்பவம் நடந்துள்ளது.

மும்பை மேற்கு வழி ரயில் தடத்தில் இன்று காந்திவிலி- போரிவிலி ரெயில் நிலையங்களுக்கு இடையே முதியவர் ஒருவர் அடிபட்டு உயிரிழந்து கிடந்துள்ளர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனே விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர் விசாரணையின் போது மின்சார ரயிலில் அடிபட்டு இறந்த அந்த முதியவர் பிரபல பாலிவுட் சீரியல் நடிகர் முகேஷ் ராவல் என்பது தெரியவந்தது.

இவர் ஹிந்தி, குஜராத்தியில் டி.வி சீரியல்களில் நடித்துள்ளார். 66 வயதான அவர் ஹிந்தி ராமாயணத்தில் விபீஷணாக நடித்து தெரியவந்துள்ளது.

மேலும் இறப்பு தற்கொலையா அல்லது கொலையா, இல்லை எதிர்ப்பாராமல் நடந்த மரணமா என விசாரணை நடந்து வருகிறது. 

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About