அனுபவம்
நிகழ்வுகள்
கருத்தரிப்புக்கு உதவும் உணவுகள்
November 30, 2016
கிராமங்களில், புதுமணத் தம்பதியரை விருந்துக்கு அழைப்பதிலேயே தொடங்கிவிடும், புதுப்பெண்ணை மசக்கைக்குத் தள்ளும் ஏற்பாடு. விருந்து மெனுவில் தலைவாழை இலை தொடங்கி வெற்றிலை வரை இடம்பெற்றிருக்கும்.
கருத்தரிப்புக்கு உதவும் சில உணவுகள் இங்கே...
பெண்ணுக்கு மாதவிடாய் சுழற்சி ஒழுங்கற்று இருந்தால், முதலில் அதைச் சீராக்க சிறப்பு உணவு அவசியம். இன்று, பெரும்பாலும் சீரற்ற மாதவிடாய்க்கு சினைப்பை நீர்க்கட்டிதான் முதல் காரணமாகச் (Polycystic Ovary Syndrom) சொல்லப்படுகிறது. அதற்காக ரத்த இன்சுலின் அளவைக் குறைக்கும் மருந்துகளும் பரிந்துரைக்கப்படுகின்றன. உண்மையில், மாதவிடாய் நாட்களின் ஒழுங்கின்மை தவிர, வேறு பிரச்னைகள் சினைப்பை நீர்க்கட்டிகளால் கிடையாது. கருமுட்டையானது கர்ப்பப்பையைப் பற்றும் நாள் தாமதப்படுவதுதான் ஒழுங்கற்ற மாதவிடாய்க்குக் காரணமே தவிர, மலட்டுத் தன்மைக்கு சினைப்பை நீர்க்கட்டிகள் ஒருபோதும் காரணமாயிருக்காது. `பாலி சிஸ்டிக் ஓவரி’ என்று தெரிந்தால், செய்யவேண்டியது எல்லாம் உணவில் நேரடி இனிப்புப் பண்டங்களைத் தவிர்ப்பதும், நார்ச்சத்து நிறைய உள்ள கீரைகள், லோ கிளைசிமிக் (Low Glycemic Foods) உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதும்தான். இவை தவிர, பூண்டுக் குழம்பு, எள்ளுத் துவையல், கறுப்புத்தோல் உளுந்து சாதம் ஆகியவை ஹார்மோன்களைச் சீராக்கி, இந்த பிசிஓடி பிரச்னையைத் தீர்க்க உதவும். சுடு சாதத்தில், வெந்தயப் பொடி ஒரு டீஸ்பூன் அளவில் போட்டு, மதிய உணவை எடுத்துக்கொள்வதும் நல்லது.
* மாதவிடாய் வரும் சமயம், அதிக வயிற்று வலி உள்ள பெண்கள், சோற்றுக் கற்றாழை மடலின் உள்ளே இருக்கும் ஜெல்லி போன்ற பொருளை இளங்காலையில் இரண்டு மாதங்களுக்குச் சாப்பிட வேண்டும். தினமும் சிறிய வெங்காயத்தை 50 கிராம் அளவுக்காவது உணவில் சேர்ப்பது, பிசிஓடி பிரச்னையைப் போக்க உதவும்.
* கருத்தரிப்பதில் தைராய்டின் பங்கு கணிசமானது. சரியான அளவுக்கு தைராய்டு சுரப்பு இல்லையென்றாலும், கருத்தரிப்பு தாமதமாகும். உணவில் மீன்கள், கடல் கல்லுப்பு, `அகர் அகர்’ எனப்படும் வெண்ணிறக் கடல் பாசி ஆகியவற்றைச் சேர்ப்பது, தைராய்டு பிரச்னையைச் சீராக்க உதவும். கடுகு, முட்டைக்கோஸை அதிக அளவில் எடுத்துக்கொள்வதும் தைராய்டு சீராக உதவும்.
* குழந்தைப்பேற்றுக்கு உதவும் மிகச் சிறந்த உணவு கீரைகள். தினமும் ஏதேனும் ஒரு கீரையைப் பெண்கள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக பசலைக்கீரை, முருங்கைக்கீரை, அரைக்கீரை. இவை ஆண்மையையும் பெருக்கும் என்கிறது ஒரு சித்த மருத்துவப் பாடல். இந்தக் கீரைகளை பாசிப் பயறு, பசு நெய் சேர்த்துச் சமைத்து உண்ண வேண்டும்.
* ஆண்களுக்கு விந்து அணுக்கள் குறைவு, விந்து அணுக்களின் இயக்கம் குறைவாக இருப்பது போன்ற காரணங்களால் குழந்தைப்பேறு தாமதப்படுகிறதா? உணவில் அதிகமாக முளை கட்டிய பயறு வகைகளையும், லவங்கப்பட்டை, ஜாதிக்காய் போன்ற நறுமணப் பொருட்களையும் சேர்க்க வேண்டும். தினமும் முருங்கைக்கீரை, முருங்கை விதை (உலர்த்திய பொடி), நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும் முருங்கைப்பிசின், சாரைப் பருப்பு ஆகியவற்றையும் உணவில் சேர்க்க வேண்டும். முருங்கை, தூதுவளை, பசலை, சிறுகீரை ஆகிய கீரைகளில் ஏதாவதொன்றை தினமும் சமைத்துச் சாப்பிட வேண்டும்.
* மாமிச உணவைவிட, மரக்கறி உணவே (காய்கறி, பழங்கள்) விந்து அணுக்களை அதிகரிக்கவும் அதன் இயக்கத்தைக் கூட்டவும் உதவும்.
* முடிந்தவரை வீட்டில் தயாரிக்கப்பட்ட, எண்ணெய்ச் சத்து அதிகம் இல்லாத உணவுகளுக்கும், கீரை, பசுங்காய்கறிகளுக்கும், பழ வகைகளுக்கும் உணவில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
* குழந்தைப்பேறு நெடு நாட்களாகத் தள்ளிப் போகும் பெண்கள், கொத்துமல்லிக் கீரையை 2 டீஸ்பூன் அளவுக்கு எடுத்து, அதனுடன் 1/4 டீஸ்பூன் வெந்தயத்தைச் சேர்த்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்ல பலன் தரும்.

0 comments