நடிகர் விஷால் நீக்கம்: தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். தயாரி...

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

தயாரிப்பாளர்கள் சங்கம் தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் நடிகர் விஷால், ஆனந்த விகடனுக்கு பேட்டியளித்திருந்தார். இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஒற்றுமையைக் குழைக்கும் வகையில் பேசியதாகவும், விதிமுறைகளுக்கு எதிராக பேட்டி அளித்தது குறித்தும் விளக்கம் அளிக்கக்கோரி தயாரிப்பாளர்கள் சங்கம் கடிதம் அனுப்பியிருந்தது. இதைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு விஷால் விளக்க கடிதம் அனுப்பினார்.

இந்த நிலையில், சங்கத்தில் இருந்து விஷாலை இன்று தற்காலிகமாக நீக்கியுள்ளது தயாரிப்பாளர்கள் சங்கம். விஷாலிடம் கேட்கப்பட்ட விளக்கத்துக்கு, அவர் அளித்த பதில் திருப்தி அளிக்காத காரணத்தால் இந்த நடவடிக்கை என்று தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் பல...

0 comments

Blog Archive

Search This Blog