அனுபவம்
நிகழ்வுகள்
தவளை...ஒட்டகம்...குதிரை...சாமியார்... ரஜினி சொன்ன குட்டி கதைகள்!
November 25, 2016
ரஜினி என்றால் உங்கள் நினைவுக்கு உடனே வருவது? ஸ்டைல்..வேகம்... நடிப்பு... எளிமை... 2.0 ?
இன்னும் நிறைய வரலாம். ஆனால், அதில் நிச்சயம் அவரது மேடைப்பேச்சும் இருக்கும். ரஜினியின் குட்டி கதைகள் அத்தனையும் வைரல் மெட்டீரியல். பெரும்பாலான சமயங்களில் அவர் இருக்கும் சூழலை அழகாய் பிரதிபலிக்கும் அந்தக் கதைகள். ரஜினி பல்வேறு நிகழ்ச்சிகளில் சொன்ன கதைகளில் சில...
1) தவளை கதை.
மொத்தம் மூணு தவளைங்க ஒரு மலைக்கு மேல இருந்த கோயிலுக்கு போக முடிவு பண்ணுச்சாம். இருந்ததாம். ஒரு மலைக்கு முன்னால் மூன்றும் ஒன்று கூடியதாம். பாம்பு, மிருகங்கள்னு பல ஆபத்துகள் நிறைந்த மலை அது. அதுவும் இல்லாம, தவளைங்க மலைக்கு மேல போக விடாம சில சக்திகளும் தடுக்க நினைச்சுதாம்.
முதல்ல ஒரு தவளை மேல ஏற போச்சு. பின்னால இருந்து போகாத போகாதன்னு ஒரு குரல். அதையும் கண்டுக்காம மலையேறின தவளைக்கு அடுத்த குரல் கேட்டுச்சு. “உன் பின்னால ஒரு பாம்பு படமெடுக்குது பார்”ன்னு கேட்டதும் தவலை திரும்ப வந்துடுச்சு.
அடுத்து ரெண்டாவது தவளை. அதே குரல், ஆனா தவளை கண்டுக்கல. ஆனாலும் அடுத்தடுத்து ஆபத்துகளை அந்த குரல் சொல்லிட்டே இருந்துச்சு. ஒரு கட்டத்துல அந்த தவளையும் திரும்ப வந்துடுச்சு. இப்போ மூணாவது தவளை ஏறுச்சாம்.
எந்த குரலுக்குமே தவலை ரியாக்ட் பண்ணல. குரலும் நிக்கல. தவளை மலை ஏறிட்டே இருந்துச்சாம். உச்சிக்கு போய் கோயிலுக்குள்ள போய்தான் நின்னுச்சாம். அதை சாதிச்ச தவளைக்கு ஒரே ஒரு வித்தியாசம் தான். காது கேட்காது. எந்த பயமுறுத்தலும் அதோட காதுல விழல. அதோட லட்சியம் மட்டும்தான் மனசுல இருந்துச்சு. அதனாலதான் சாதிக்க முடிஞ்சது.
நாமளும் அப்படித்தான். எடுத்த காரியத்தை மட்டும் மனசுல வசிச்க்கிட்டு, வேண்டாத விஷயங்களை நம்ம காதுல போட்டுக்கவே கூடாது. பயந்தா ஜெயிக்கிறது எப்படி?
2) ஒட்டக கதை:
ஒரு அம்மா ஒட்டகமும், அதோட குட்டி ஒட்டகமும் பேசிட்டு இருந்துச்சு. ஒட்டகமா இருந்தாலும் குட்டியாச்சே? அதனால நிறைய கேள்விகள் கேட்டுச்சாம்.
நம்ம காலு மட்டும் ஏன்மா இவ்ளோ நீளமா இருக்கு
அதுவா.. நாம ரொம்ப தூரம் பாலைவனத்துல நடக்கணும்ல. அதனால
நம்ம உதடு ஏன்ம்மா இவ்ளோ கடினம இருக்கு?
அதுவா... நமக்கு கிடைக்கிறதெல்லாம் முள் தாவரங்கள் தான? அது கிழிச்சிட கூடாதுன்னுதான்
நம்ம வயித்துல போய் ஏன்ம்மா தண்ணி பை?
அதுவா...தாகம் எடுத்தா பாலைவனத்துல தண்ணி கிடைக்காது இல்ல.. அதனாலதான்
எல்லாம் சரிம்மா.. அப்பறம் நாம ஏன் சர்க்கஸ்ல இருக்கோம்?
3) சாமியார் கதை
ஒரு ஊருக்கு சாமியார் ஒருவர் வருவதாக இருந்துச்சு. ஊர்ல இருக்கிற எல்லோருக்கும் அந்த தகவல் முன்கூட்டியே சொல்லப்பட்டு இருந்துச்சு. மகக்ளும் ஆர்வமா இருந்தாங்க. ஆனா சாமியார் ஊருக்கு வந்தப்ப செம மழை. வெள்ளம். ஒரேஒருவனை தவிர ஊரில் வேற யாரும் வரவில்லை. சாமியாருக்கு ரொம்ப ஏமாற்றம். வந்த ஒருத்தனை பார்த்து “இன்னொரு நாள் பிரசங்கம் பண்றேன்”ன்னு சொன்னாராம்.
உடனே அவன், “சாமி நான் குதிரை வியாபாரி. என்கிட்ட இருக்கிர எல்லா குதிரையும் மேய போயிடுட், ஒரே ஒரு குதிரை நின்னுச்சுன்னு வச்சுக்கோங்க. அதுக்கும் நான் சாப்பாடு போடுவேன். மத்தது எல்லாம் இல்லைன்னு அத விட்டுட மாட்டேன்”ன்னு சொன்னானாம். சாமியாருக்கு உறுதுச்சு. உடனே அவனுக்கு இம்மை மறுமை, புலன் அடக்கம்னு எல்லா விஷயத்தையும் ஒண்ணு விடாம சொன்னாராம். “இப்ப சந்தோஷமா”ன்னு கேட்டாராம் சாமியாரு. அதுக்கு அவன் “சாமி..மத்த குதிரையெல்லாம் மேய போச்சுன்னு இருக்கிற எல்லா உணவையும் நிக்குற அந்த ஒரு குதிரைக்கு மட்டுமே போட மாட்டேன். அந்த குதிரைக்கு என்ன கொடுக்கணுமோ அத மட்டும்தான் கொடுப்பேன்”ன்னு சொன்னானாம்
4) குதிரை கதை
கோயில் திருவிழா ஒன்று. மக்கள் பய பக்தியோடு மலை உச்சியில் உள்ள கோவிலுக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள். கோயில் பிரகாரத்தில் அம்மனுக்கு பூஜைகள் எல்லாம் பண்ணிட்டு இருக்ககாங்க. அந்த அம்மன் சிலையை மலை உச்சிக்கு கொண்டு போகணும். அதுக்காக ஒரு குதிரையை தயார் பண்றாங்க. நல்ல வெள்ளைக்குதிரை. அதை அழகா அலங்காரம் பண்ணி, அது மேல அம்மன் சிலையை வச்சு கொண்டு போறாங்க. இதனால குதிரைக்கு கொஞ்சம் கர்வம் ஏற்படுது. குதிரை மலை உச்சிக்கு போனதும் எல்லோரும் வழிபடுறாங்க. உடனே கர்வம் அதிகம் ஆகுது.. குதிரை நகராம அப்படியே நிக்குது. பூசாரிங்க தட்டிக்கொடுத்து ஓட வைக்கிறாங்க. மெதுவா நகருது. மறுபடியும் மக்கள் வணங்குறாங்க. மறுபடியும் நிக்குது. செல்லப்பேரெல்லாம் சொல்லி நகர்த்த பாக்குறாங்க. இப்படியே போகுது. ஒரு கட்டத்துல எல்லோருக்கும் எரிச்சல் ஆயிடுது. பின்னாடி வந்துட்டு இருந்த இன்னொரு குதிரை மேல அம்மன் சிலையை மாத்தி வச்சு போக அரம்பிச்சிட்டாங்க. இதை நான் ஏன் சொல்றன்னா, மக்கள் மரியாதை தந்தது அம்மனுக்குதான். குதிரைக்கு இல்லை. அந்த விக்ரகம் இருக்கிற வரைதான் குதிரைக்கு மரியாதை. அது மாதிரி ரசிகர்கள் என்னும் அம்மன் சிலை இருக்கிற வரைதான் என்ன மாதிரியான குதிரைகளுக்கும் மரியாதை. ரசிகர்களை என்னிடம் இருந்து பிரிச்சிட்டா குதிரையின் கதிதான் எனக்கும்.

0 comments