அனுபவம்
நிகழ்வுகள்
வாட்ஸ்-ஆப்பில் புதிய வசதி அறிமுகம்!
November 25, 2016
வாட்ஸ்-ஆப் சில தினங்களுக்கு முன்பு வீடியோ காலிங் வசதியை அறிமுகப்படுத்தியது. இதையடுத்து, அந்நிறுவனம், ஷேர் செய்யப்படும் வீடியோக்களை தரவிறக்கம் செய்யும்போதே ப்ளே செய்து பார்க்கும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த வசதியின் மூலம், முழு வீடியோவையும் தரவிறக்கும் செய்யும் வரை காத்திருக்காமல் ப்லே செய்து பார்க்க முடியும். இதன் மூலம், தேவை இல்லாத வீடியோக்களை முழுவதுமாக தரவிறக்கம் செய்யாமல் தவிர்க்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்த வசதியை வாட்ஸ்-ஆப் விரைவில் வெளியிட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
0 comments