உதயமாகிறது அம்மா திராவிட முன்னேற்ற கழகம்

அதிமுகவை சேர்ந்த சீனியர் அமைச்சர் ஒருவர் நம்மிடம் "அதிமுகவின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வராகவும் இருந்து வந்த ஜெயலலிதா இறந்து ஒரு வ...

அதிமுகவை சேர்ந்த சீனியர் அமைச்சர் ஒருவர் நம்மிடம் "அதிமுகவின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வராகவும் இருந்து வந்த ஜெயலலிதா இறந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை,அதற்குள் அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை பதவி ஏற்கச்சொல்லி எம்.எல்.ஏ க்கள் ,அமைச்சர்கள் என்று பல்வேறு நபர்கள் போயஸ்கார்டன் சென்று சசிகலாவை சந்தித்து பொதுச்செயலாளர் பதவி ஏற்கச்சொல்லி வற்புறுத்தி வருவதாக செய்திகள் வருகிறது.இந்த வேலையை சசிகலாவின் கணவர் நடராஜன் திட்டமிட்டுபரப்பி வருகிறார்.

இதில் மேல்மட்ட நபர்களுக்கு பதவியை தக்க வைக்க இப்படி சசிகலாவிடம் சரணடைந்து விடுகிறார்கள்.ஆனால் தொண்டர்கள் சசிகலாவை விரும்பவில்லை.இதனால் பல்வேறு மாவட்டங்களில் அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சி உருவாகி வருகிறது.இதற்கு தலைவர் விரைவில் அறிவிக்கப்படுவார்" என்றார் அதிமுகவை சேர்ந்த சீனியர் அமைச்சர் ஒருவர்.

மேலும் பல...

2 comments

 1. ஜெயலலிதா ஒரு அசாத்தியமான அரசாட்சியை நடத்தியவர் என்ற இல்லாத ஒரு இமேஜ் ஐ இந்தியா முழுக்க பதிவு செய்தவர்கள் அவரை அம்மாவாக கொண்டாடிய பல்லான கோடி மக்கள் ... அந்த மக்கள் மீது எந்த விதமான கரிசனமும் இல்லாமல் மனசாட்சியும் இல்லாமல் கிட்டத்தட்ட 20 வருடங்களையும் வெறும் gimmic அரசியல் செய்து வீணாக்கியவர் ஜெ ...
  நாம் வேரோடு வெறுக்கும் கட்டுமரம் கூட பெயர் சொல்லும் பல பதிவுகளை செய்திருக்கிறார் .அதில் பலவற்றின் மீது ஜெ லேபிள் ஒட்டிக்கொண்டார் (மெட்ரோ ,கோயம்பேடு நிலையம் மாதிரி ). ஜனநாயக மரபுகள் எல்லாம் அடித்து நொறுக்கியதையும் இருக்கின்ற அதிகாரங்களை துஷ் பிரயோகம் செய்ததையும், தன்னிடம் குனிந்தால் போதும் தேசம் எக்கேடு கேட்டால் என்ன என்ற அடிப்படையில் எந்த தகுதியும் இல்லாதவர்களை வைத்து 20 வருட நிர்வாகத்தை சிதைத்தததையும்
  ஒரு கம்பீரமான தலைவிக்கான தகுதியாகவும் செய்த தவறுகளுக்கு சிறை சென்றதை போர்க் குணம், Iron Lady, எனவும் சொல்லிப்பழகிவிட்டோம் ...அவர் மிகப்பெரிய intellectual என்று சொல்லும்படியான அரசாண்ட சான்றுகள் என்ன விட்டுச்சென்றிருக்கிறார் என் கண்ணை மூட்டி யோசித்துப்பாருங்கள் .இத்தனை வருடத்தில் ஒரே ஒரு திட்டம் ?????????????????????
  .... உடனே மளிகை கடை list (அம்மா உப்பு, அம்மா பருப்பு என்று) மற்றும் ஹோட்டல் கடை list (ஒரு ரூபாய் இட்லி, ஐந்து ரூபாய் பொங்கல் என்று) பட்டியல் இடவேண்டாம்..
  இத்தனை வருடத்தில் ஏதாவது ஒரு நல்ல திட்டம், அதாவது தமிழக முன்னேற்றத்திற்கான திட்டம் நிறைவேற்றியுள்ளாரா,,,????.
  மற்றவர்கள் செய்த திட்டங்களையும் தனது பெயரில் எந்த ஒரு வெட்கமே இல்லாமல் இது நான் கொண்டு வந்தது என்று கூறுவது / திறந்து வைப்பது (மெட்ரோ ரயில் / கோயம்பேடு /திமுக விரைவில் செய்த பல மின் திட்டங்கள் 2011 / பல பாலங்கள்)

  சேது சமுத்திர திட்டத்தை இனி எப்போதுமே நிறைவேறாத படி முடக்கியது யார். வாழும் வரை அவர் தான் எல்லாம், தான் மட்டும் தான் என்று தனக்கு கிடைக்காத புகழ் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற காழ்ப்புணர்வு மிகுந்த தன்னலத்துடன் வாழ்ந்தாரே தவிர, (ஓ அதை தான் நாம போர் குணம் , இரும்பு மனுஷி – என்று சொல் வைத்து விட்டார்களே) .. தமிழ்கதை பற்றியோ, தமிழ் மக்களை பற்றியோ அல்லது அவர் கட்சியை பற்றியோ எள்ளளவும் கவலை படவில்லை என்பதை அறிவுள்ளவர்கள். சிந்திப்பவர்கள் அறிவர்.

  இப்போது பாருங்கள், அவர் அந்த கட்சியின் மீது அக்கறையுள்ளவர் என்றால் தனக்கு பிறகு கட்சியை வழிநடத்த தேவையான எல்லா ஆயத்தங்களை செய்த்திருப்பார். தான் தான், வேறு யாரும் இருக்கக்கூடாது என்ற ஆணவத்தால் அதுவும் கட்சியை பாடாய் படுத்தப்போகிறது.

  ReplyDelete
 2. இப்போது பாருங்கள், அவர் அந்த கட்சியின் மீது அக்கறையுள்ளவர் என்றால் தனக்கு பிறகு கட்சியை வழிநடத்த தேவையான எல்லா ஆயத்தங்களை செய்த்திருப்பார். தான் தான், வேறு யாரும் இருக்கக்கூடாது என்ற ஆணவத்தால் அதுவும் கட்சியை பாடாய் படுத்தப்போகிறது.

  எதிர் கட்சியை முழு எதிரி கட்சி, அவர்கள் ஜென்ம விரோதி, அவர்களிடத்தில் யாரும் பேசினாலே அவர்களுக்கு ஆபத்து என்று தமிழக மக்களிடையே ஒரு எதிரி தன்மையையும், ஒற்றுமையின்மையையும் உருவாக்கியது யார்..??? .

  இதெல்லாம் இந்த மாயையை நம்பி இருக்கும் மக்களுக்கு தெரியவா போகிறது. ஆணவத்துடன் வாழ்வதை பார்த்து அவர் இரும்பு மனுஷி என்று மக்களும் தான் பெருமை பட்டு கொள்கிறார்களே தவிர இரும்பு எவ்வாறு அதி சீக்கிரத்தில் துரும்பாகியது என்பதை அவர்கள் இந்த ஜென்மத்தில் சிந்திக்க போவதில்லை என்பது மட்டும் உறுதி.

  துவண்டு போனதையும் போராடி போராடி உயிர் நீத்தார் என்று தானே சொல்கிறார்கள். அவரோடு இருந்த அமைச்சர்கள் , எம்,எல்,ஏ க்களோ இப்போது சொல்கிறார்களா... இல்லை... ஒட்டு போட்ட, கதறி அழுத்த மக்கள் ரொம்ப புத்தி சாலி மக்கள்..

  அம்மா-வை போல அதி புத்திசாலி இல்லை, அம்மா-வை போல அதி திறமைசாலி இல்லை, அம்மா-வை போல அரசியல் சாணக்கியம் யாருக்கும் இல்லை என்று புகழ் பாடும் நீங்கள் .... கொஞ்கம் யோசித்து பாருங்க.: அந்த அதி புத்திசாலி-க்கு யாரை பக்கத்தில் வைத்து கொள்ளவேண்டும் என்று கடைசி வரை தெரியாமல் இருந்தது தான் சாண்று.

  அம்மா இறந்த பின்பு அமைச்சர்கள், யாரும் அளவில்லை என்று வருத்தப்படும் மக்கள், கொஞ்சம் இதையும் யோசிச்சு பாருங்க:
  • எப்போதும் அடுத்த அமாவாசை வரை தான் அவை பதவி என்கிற நிலைமை-யா உருவாக்கி அதில் ஆனந்தம் அடைத்தது இந்த அம்மா தானே..
  • எப்போதும் BENCH தட்டி பொம்மைகள் போல தானே இந்த அம்மா அவர்களை வைத்து இருந்தார், ..
  • எப்போதும் வார்த்தைக்கு வார்த்தை “மாண்பு மிகு , புரட்சி தலைவி, இதய தெய்வம்”.. என்று புகழ் பாடிக்கொண்டு தானே இருக்க ஆசை பாட்டர்..

  இப்படி எல்லாம் நோக வைத்துவிட்டு .. இறந்தவுடன் அளவில்லை .. அலுது புலம்பவில்லை என்று எப்படி எதிர் பார்கிறீர்கள் மக்களே ?
  இதில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா கட்சியை ஒரு ராணுவ அமைப்பு போன்று வைத்து இருந்தார் என்று புகழ் வேற .. .. ஆட்டு மந்தை யாக இவளோ நாள் வைத்து இருந்தார் என்று சொல்ல தான் தொன்றுகிறது ..

  ......இறந்தவர்களை பேசுவது இது நேரமில்லை என்றால் அவரை அடுத்தகணம் மறந்துவிட்டு சசிகலா உட்பட அடித்துக்கொள்கிறதே ஒரு கூட்டம் அதை நினைத்துப்பாருங்கள் ...

  இது முடிவெடுக்கும் நேரம் ...தேசம் குப்பையாக கிடக்கிறது ..இனி எந்த ஒரு அரசியல் வாதி மீதும் செண்டிமெண்ட் வைக்கும் புத்தியை அறுத்துப்போடுங்கள் ..

  ReplyDelete

Blog Archive