அச்சமின்றி.....திரைவிமர்சனம்...அச்சமின்றி சென்று பார்க்கலாம்

பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு முறை ஹிட் கொடுத்துவிட்டால் மீண்டும் அதே கூட்டணியோடு சேர்வது கொஞ்சம் குறைவுதான். அதேபோல் இல்லாமல் தன்னுடைய முந்...

பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு முறை ஹிட் கொடுத்துவிட்டால் மீண்டும் அதே கூட்டணியோடு சேர்வது கொஞ்சம் குறைவுதான். அதேபோல் இல்லாமல் தன்னுடைய முந்தைய படத்தை எடுத்த இயக்குனர் ராஜ பாண்டியுடன் இணைந்து விஜய் வசந்த், சமுத்திரக்கனி, ஸ்ருஷ்டி டாங்கே, கருணாஸ் என பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வெளிவந்திருக்கும் படம்தான் அச்சமின்றி.

கதைக்களம்

படத்தின் தொடக்கத்தில் ஒரு நேர்மையான கலெக்டராக வரும் தலைவாசல் விஜய், பள்ளிகளுக்கு அனுப்பப்படும் பொது தேர்வின் கேள்வித்தாள்களை, தனியார் பள்ளிகளுக்கு விற்கும் ஒரு மோசடி கும்பலை பிடிக்க, பின் அந்த மோசடி கும்பலால் கொல்லப்படுகிறார்.

அதன்பின் பேருந்துகளில் Purseகளை திருடும் இளைஞனாக வரும் விஜய் வசந்த், ஸ்ருஷ்டி டாங்கேவை சந்திக்க இருவரும் பழக ஆரம்பிக்கிறார்கள். பின் அதே ஏரியாவில் போலீசாக இருக்கும் சமுத்திரக்கனியின் தோழியான வித்யா திருமணம் செய்து கொள்ளும் முன் இறந்துபோகிறார்.

ஒரு கட்டத்தில் விஜய் வசந்த்தையும், சமுத்திர கனியையும், ஸ்ருஷ்டி டாங்கேயையும் அந்த கும்பல் துரத்துகிறது. இவர்களை எதற்காக அந்த கும்பல் துரத்துகிறது, இவர்கள் மூவருக்கும் அந்த கும்பலுக்கும் என்ன பிரச்சனை என்கின்ற முடிச்சுகள் இரண்டாம் பாதியில் அவிழ்க்கப்படுவதுதான் மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

இப்போதுள்ள சூழ்நிலையில் தனியார் பள்ளிகளில் நடக்கும் தவறுகளையும் அதனால் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும் கமர்ஷியலாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் ராஜபாண்டி. சொல்லவரும் கருத்தை கதையில் இருந்து நகர்த்தாமல் கதையோடு திரைக்கதையை கொண்டு சென்றுள்ளதால் இவரை பாராட்டியே ஆக வேண்டும்.

விஜய் வசந்த் தன்னுடைய முந்தைய படத்தில் எப்படி இருந்தாரோ அதேபோலதான் தோற்றத்திலும் சரி நடிப்பிலும் சரி ஒரே மாதிரி தான் உள்ளார். ஸ்ருஷ்டி டாங்கேவிற்கு கதையில் கொஞ்சம் இடம் இருப்பதால் அவரும் தன்னுடைய நடிப்பினை சிறப்பாக செய்துள்ளார். சரண்யா பொன்வண்ணனை ஒரு அம்மாவாக பார்த்து சலித்து போனவர்களுக்கு இதில் வேறு மாதிரி பார்க்கலாம், வில்லியாக வந்து மிரட்டி உள்ளார்.

இதுதவிர சமுத்திரக்கனியும், ராதா ரவியும் சொல்லவே தேவை இல்லை, இருவரும் அவர்களுடைய காட்சிகளில் சிக்ஸர் அடித்துள்ளனர். குறிப்பாக நாட்டில் அரசியல்வாதிகள் திருந்த வேண்டும் என்பதை விட அவர்களை தேர்ந்தெடுக்கும் மக்கள் தான் திருந்த வேண்டும் என்பதை சொல்லும் போது க்ளாப்ஸ் அள்ளுகிறது.

பிரேம்ஜி பின்னணி இசையில் செலுத்தியிருக்கிற கவனத்தை சற்று பாடல்களிலும் செலுத்தி இருக்கலாம்.

இதை தவிர ஒளிப்பதிவும், படத்தொகுப்பும், சண்டை காட்சிகளும் ரசிக்கும் விதமாக இருப்பது கொஞ்சம் நிறைவு தருகிறது.

க்ளாப்ஸ்

எதார்த்தமான சண்டை காட்சிகள். முக்கியமாக படத்தின் கதையையும், திரைக் கதையையும் தெளிவாக அமைத்திருப்பது.

சரண்யா பொன்வண்ணனின் மாறுபட்ட நடிப்பு.

சமுத்திரகனி, ராதா ரவி அவர்களின் எதார்த்தமான நடிப்பும், வசனங்களும் கை தட்டல்களை வாங்குகிறது.

பல்ப்ஸ்

படத்தின் பாடல்கள் மனதில் ஒட்டாமல் இருப்பது.

நிறைய காமெடி நடிகர்கள் இருந்தும் அவர்களை இன்னும் கொஞ்சம் நன்றாக உபயோகித்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

படத்தின் தொடக்கத்தில் தேவையற்ற காமெடிகளால் கொஞ்சம் கதை மெதுவாக செல்கிறது.

மொத்தத்தில் அச்சமின்றி சென்று பார்க்கலாம்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About