எம்.ஜி.ஆர் கிடைச்சுட்டாரா? இன்டஸ்ட்ரியில் பரபரப்பு

எம்.ஜி.ஆரை பற்றி முன் குறிப்போ, பின் குறிப்போ அவசியமில்லை. கிட்டதட்ட முப்பது வருஷங்களுக்கு மேலாச்சு, அவர் இறந்து. இன்னமும் எம்ஜிஆர் பெயரை...

எம்.ஜி.ஆரை பற்றி முன் குறிப்போ, பின் குறிப்போ அவசியமில்லை. கிட்டதட்ட முப்பது வருஷங்களுக்கு மேலாச்சு, அவர் இறந்து. இன்னமும் எம்ஜிஆர் பெயரை சொல்லாமல் அரசியலும் இல்லை. சினிமாவும் இல்லை. அதுதான் எம்.ஜி.ஆரின் பெருமை.

ரஜினியின் சூப்பர் ஸ்டார் நாற்காலிக்கு நடிகர்கள் குறி வைத்து ஓடிக் கொண்டிருந்தாலும், அந்த ரஜினியே எம்.ஜி.ஆரின் நாற்காலியை நிரப்ப முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார் என்பதுதான் நிஜம். அப்படிப்பட்ட ஒரு பெரும் கலைஞனை, போற்றுதலுக்குரிய மனிதாபிமானியை, கவுரவத்திற்குரிய அரசியல்வாதியை பற்றி அறியாத தகவல்களுடன் ஒரு படம் வந்தால், அந்த படத்தை எப்படியெல்லாம் தமிழ் சமூகம் கொண்டாடும்? அதை தெரிந்து கொள்ள இன்னும் சிறிது காலம் காத்திருந்தால் போதும்.

காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை அவரைப்போலவே உருவத் தோற்றமுள்ள ஒருவரை கொண்டுவந்து அவர் மூலம் இந்த நாட்டுக்கு படிக்காத மேதை பற்றி தெரியாத விஷயங்களை அறிய வைத்த ரமணா கம்யுனிகேஷன்ஸ்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கப் போகிறது.

நட்சத்திர தேர்வை ஆரம்பித்துவிட்டார்கள். எம்.ஜி.ஆர் கிடைச்சுட்டாராங்க?

மேலும் பல...

0 comments

Blog Archive