தகரத்தில் காடுகளை உருவாக்கும் இயற்கைக் காதலன்!

"நீங்கள் காதலிப்பதைக் கொண்டாடுங்கள்... காரணம், வாழ்க்கை நம்மைவிட மிகப் பெரியது!" இதைத்தான் தன் வாழ்க்கைத் தத்துவமாக முன்வைக்கிறார...

"நீங்கள் காதலிப்பதைக் கொண்டாடுங்கள்... காரணம், வாழ்க்கை நம்மைவிட மிகப் பெரியது!" இதைத்தான் தன் வாழ்க்கைத் தத்துவமாக முன்வைக்கிறார் டான் ராலிங்க்ஸ். இங்கிலாந்தைச்
சேர்ந்த இளைஞர். மண்வெட்டியில் தொடங்கி, மரம் அறுக்கும் ரம்பம், கார்கள், வேன்கள் வரை தகரங்களில், இயற்கைச் சார்ந்த வடிவங்களைச் செய்கிறார். அப்படி சமீபத்தில், "நேச்சர் டெலிவர்ஸ்" ( Nature Delivers ) என்ற பெயரில் ஒரு பழைய ஃபோர்ட் - ட்ரான்ஸிட் ( Ford - Transit ) வேனில் சில மர வடிவங்களைக் கைகளாலேயே செதுக்கினார்.

"பொதுவாக மோட்டார் வாகனங்களை நவீனத்தின் அடையாளமாகவும், இயற்கைக்கு மாற்றாகவும் பார்க்கிறோம். ஆனால், இவை இயற்கையிடமிருந்து நம்மை முற்றிலும் விலக்குகிறது. இவைகளைக் கொண்டு இயற்கையை நாம் கடந்திட முடியாது" என்ற தத்துவத்தின் அடிப்படையில் இவர் இதை வடிவமைத்துள்ளார். வெளிநாடுகளில் ஃபோர்ட் ட்ரான்ஸிட் வாகனம், பொருள்களை டெலிவர் செய்வதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. நவீன வாழ்வின் முக்கிய அடையாளமாக அது இருப்பதால், அந்த வேனை இவர் தேர்ந்தெடுத்துள்ளார். ஆனால், சில நாள்களுக்கு முன்னர் ஒரு விஷமி கும்பல், அந்த வேனிற்கு தீ வைத்துவிட்டது. தீக் காயங்களோடு கருப்படைந்து நிற்கும் அதைப் பார்த்து இப்படிச் சொல்லியுள்ளார் டான் ராலிங்க்ஸ்,

"மரங்களின் வடிவமைப்பைக் கொண்ட வேனிற்கு தீ வைத்துள்ளனர். இருந்தும் அது அப்படியே இருக்கிறது. இயற்கையும் அப்படித்தான். மிகவும் வலிமையானது" என்று சொல்லியிருக்கிறார். பணம் சம்பாதிக்கும் வேலைகளை உதறிவிட்டு, இயற்கைக்காக டான் ராலிங்க்ஸ் மேற்கொள்ளும் முயற்சிகள் உலகளவில் பாராட்டுக்களைப் பெற்று வருகின்றன.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About