அனுபவம்
நிகழ்வுகள்
எங்கே இருக்கிறார்கள் ஏலியன்கள்?- ஜூன் 19ல் அதிரவைக்கப் போகிறது நாசா
June 15, 2017
பூமியைத் தவிர இந்த அகண்ட பால்வீதியில் பல கிரகங்கள் இருப்பதாகவே அறிவியல் ஆதாரங்கள் கூறுகின்றன. ஆனால், பூமியில் மனிதன் வாழ்வதுபோல், வேறு ஏதாவது ஒரு கிரகத்தில், உயிரினங்கள் ஏதும் வாழ்கிறதா என்ற சந்தேகம் இல்லாதவர்களே இந்தப் பூமியில் இருக்க முடியாது. உண்மையில் ஏலியன்ஸ் என்றழைக்கப்படும் வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்களா? அவர்கள் அவ்வப்போது பறக்கும் தட்டுகளில் பூமிக்கு வந்து போவதாகக் கூறப்படுவது உண்மையா?
ஏலியன்ஸ்
மனித அறிவியல் தொழில்நுட்பங்களை எல்லாம் அசைத்துப் பார்த்த இந்தக் கேள்விக்கு விடை கிடைக்கவுள்ளது. ஆம், இத்தனை காலம் கேள்விக்குறியுடனே இருந்துவந்த வேற்றுகிரகவாசிகள் குறித்த அத்தனை சந்தேகங்களுக்கும் விடையளிக்கத் தயாராகி வருகிறது நாசா. நாசாவின் அறிவிப்பு குறித்து அறிந்துகொள்வதற்கு முன்னர், நம்மில் உலவிவந்த ஏலியன்ஸ் குறித்த கதைகளையும், நிரூபணங்கள் எனக் கூறப்பட்டவைகள் குறித்தும் காணலாம்.
பழங்கால ஆய்வுகள், கல்வெட்டுகள் போன்றவற்றிலிருந்து எகிப்து பகுதிகளில் ஏலியன்கள் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், எகிப்திலுள்ள பிரமிடுகள் ஏலியன்களால் அமைக்கப்பட்டவை என்றொரு கருத்தும் நிலவி வருகிறது. ஆனால், இந்தக் கதைகளுக்கு அப்பால், சில அறிவியல் விஞ்ஞானிகள் ஏலியன்கள் குறித்து வெளியிட்ட ஆதாரங்கள், வேற்றுகிரகவாசிகள் குறித்த பலரது சந்தேகங்களையும் தீவிரப்படுத்தியது நிதர்சனம். 1971ஆம் ஆண்டு அப்போல்லோ பதிநான்காம் திட்டப்பணியின் அங்கமாக நிலாவில் காலடி வைத்த ஆறாவது மனிதர் என்ற பெயரைப் பெற்றவர் நாசா விண்வெளி வீரர் எட்கர் மிட்செல். இவர் அளிக்கும் தகவல்கள் அமெரிக்காவின் பென்டகன், நாசா எனப் பலரையும் வியக்க வைத்தது.
எட்கர் மிட்செல் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவில் நியூ மெக்சிகோ பகுதியில் 1947-ஆம் ஆண்டு ஒரு பறக்கும் தட்டு விபத்தில் ஏலியன்களைத்தான் நேரடியாகப் பார்த்ததாகக் கூறியுள்ளார். இதுகுறித்து அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பான ‘பென்டகன்’ உறுதி செய்தபோதும் ஏலியன்ஸ் குறித்தத் தகவல்கள் உறுதி செய்யப்பட்டதாக எந்தவொரு தகவல்களும் இல்லை. ஆனால், அமெரிக்கா மிட்செல்லின் கூற்றை சாதாரணமாக விடவில்லை. வானவியல் நிபுணர்கள், அறிவியல் அறிஞர்கள், விஞ்ஞானிகள் எனப் பலரையும் இணைத்த ஒரு குழுவின் மூலம் வேற்றுகிரகவாசிகள் குறித்த ஆய்வில் இறங்கியது.
ஏலியன்ஸ் குறித்து வரும் அத்தனை ஆய்வுகளும், செய்திகளும், கட்டுரைகளும், தொடர்களும், திரைப்படங்களும் ஹிட் அடித்து வருவதற்கான ஒரே காரணம், ‘ஏலியன்ஸ் இருக்கிறார்களா, இல்லையா?’ என்ற இந்தக் கேள்வி. கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்பதற்குக்கூட இரண்டு வருடங்களில் விடை தெரிந்துவிட்டது. ஆனால், மனிதன் அறிவியல் உலகில் நுழைந்ததிலிருந்து விடை தெரியாமல் தவித்து வரும் ஒரே கேள்வி, ‘ஏலியன்ஸ்’.
எதற்கும் ஒரு முடிவு உண்டு என்பது போல், ஏலியன்ஸ் குறித்த சந்தேகங்களுக்கும் ஒரு முடிவு ஏற்படவுள்ளது. பல ஆண்டுகளாக ஸ்டீஃபன் ஹாக்கிங்க்ஸ் போன்ற வானவியல் நிபுணர்கள் கொண்டும், ரேடியோ சிக்னல் தொழில்நுட்பம் கொண்டும் பல ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது வேற்றுகிரகவாசிகள் குறித்து அறிவியல் பூர்வமான உண்மைகளை வெளியிடப்போவதாக நாசா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்படி, வரும் திங்கட்கிழமை, ஜூன் 19-ஆம் தேதி அமெரிக்க நேரப்படி பிற்பகல் 3 மணிக்கும், இந்திய நேரப்படி நள்ளிரவு 1 மணிக்கும் ‘ஏலியன்ஸ்’ குறித்த அறிவியல் ஆய்வின் முடிவை வெளியிட உள்ளது நாசா. எவ்வளவு ஆர்வமிருந்தாலும், திங்கட்கிழமை வரை பொறுத்திருக்கத்தான் வேண்டும் மக்களே..!

0 comments