புலிமுருகன் - திரைவிமர்சனம்

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் ஆன புலிமுருகன் படம் தமிழில் இன்று வெளியாகியுள்ளது. அது ப...

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் ஆன புலிமுருகன் படம் தமிழில் இன்று வெளியாகியுள்ளது. அது போன்ற சாதனையை கோலிவுட்டிலும் செய்யுமா, புலிமுருகன் வசூல் வேட்டை ஆடுமா என பார்ப்போம்.

கதைக்களம்

சிறுவயதில் அப்பா, அம்மா இருவரையும் இழந்த மோகன்லால் தன் தம்பியை தன் மாமன் மற்றும் புலியூர் மக்களின் உதவியுடன் வளர்த்து ஆளாக்குகிறார்.

ஆரம்பத்தில் இருந்தே ஊர்காரர்களுக்கு தொந்தரவாக பெரிய புலி ஒன்று நடமாடி வருகிறது. பலரையும் தாக்கும் இப்புலியால் ஒரு பெரிய ஆபத்து வருகிறது.

இதற்கிடையில் முருகன் என கிராம மக்களால் அழைக்கப்படும் மோகன்லாலுக்கு ஊர்க்காரியான கமாலினி முகர்ஜி மீது காதல் வருகிறது. அவரை திருமணம் செய்து தன் செல்ல மகளுடன் காட்டில் வாழ்கிறார்.

வனத்துறை அதிகாரியாக வரும் கிஷோரால் கமாலினிக்கு பாலியல் தொல்லை வருகிறது. இன்னொரு பக்கம் முக்கிய புள்ளியின் மகளாக வரும் நமீதாவுக்கு முருகன் மீது ஆசை வருகிறது. அவ்வப்போது வந்து போகிறார்.

தன் தம்பியின் நன்மைக்காக உதவி செய்யப்போய் வில்லன் கஜபதி பாபுவின் வஞ்சக வலையில் முருகன் சிக்குகிறார். தாதா கிரி என்ற பெயரில் கஜபதி கடத்தல் தொழில் செய்கிறார். ஒரு கட்டத்தில் முருகனின் தம்பி உயிருக்கு வில்லனால் ஆபத்து வருகிறது.

நமீதாவின் வலையில் முருகன் விழுந்தாரா, தன் தம்பியை காப்பாற்றினாரா, புலி என்னானது, ஊர்மக்கள் என்ன ஆனார்கள் என்பது தான் மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

காடுகளை மைய்யப்படுத்தி படங்கள் பல வந்தாலும், புலியை வைத்து ஏதோ படம் எடுத்திருக்கிறார்கள். காட்டுக்கே ராஜா போல மோகன்லாலை மக்கள் நினைக்க அவரும் நடிப்பை சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

தம்பிக்கு நன்மை செய்தாலும் அநியாய வழியில் இறங்க வேண்டிய கட்டாயத்தில் மோகன்லால் செய்யும் வேலை கதையில் ஒரு பெரிய ட்விஸ்ட்.

மனைவியாக நடித்திருக்கும் கமாலினி கடைசி வரை அப்படியே மலைவாழ் பெண் போல மாறியிருக்கிறார். மோகன்லாலுடன் இவர் போடும் சண்டைகள் ரசிக்கலாம். நீண்ட நாட்களுக்கு பிறகு சினிமாவில் முகம் காட்டியிருக்கிறார்.

சான்ஸ் தேடி அலைந்த நமீதா தான் முதலில் எப்படி கவர்ச்சி காட்டி எண்ட்ரி கொடுத்தாரோ அதே போல இதிலும் இறங்கியிருக்கிறார். இவருக்கு ஒரு சில காட்சிகள் தான் என்றாலும் பெரிதாக கான்ஸப்ட் இல்லை.

கஜபதி பாபு எல்லா படங்களிலும் இருப்பது போல தான் இந்த படத்திலும். புலியை பிடிக்க விரித்த வலையில் இவர் சிக்கியது படத்தின் கோணத்தை திசை திருப்புகிறது.

முதல் பாதி புலியை நோக்கி நகர்ந்தாலும், இரண்டாம் பாதி வேறு ட்ராக்கில் போவது தான் கொஞ்சம் இடிக்கிறது.

கிளாப்ஸ்

இயக்குனர் காட்சிகளை படமாக்கியவிதம் நன்றாக இருந்தது. டப்பிங் செய்த விதம் கச்சிதம்.

ஒரே பாடல் தான் என்றாலும் மலையாள சாயல் அப்படியே இருந்தது.

கிளாமாக்ஸ் சண்டை காட்சிகள் மோகன்லாலுக்கு சவால். ரசிக்கும் படி இருந்தது.

பல்பஸ்

சக வனத்துறை அலுவலரை புலி தாக்கும் போது மற்றவர்கள் எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்ப்பது லாஜிக் பிரச்சனை.

கதை போகும் போக்குக்கும் படத்தின் பெயருக்கும் விரிசல் இருப்பது போல தோன்றுகிறது.

மொத்தத்தில் புலிமுருகன் ஒகே. புலி பதுங்கி நிற்குமா, பாய்ந்தோடி விடுமா என பொறுத்திருந்து பார்போம். 

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About