நடிகர் ரஜினியின் சொத்து மதிப்பு எவ்வளவு? அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்

நாட்டை திருத்துவதற்காக அரசியலுக்கு வரப்போவது போன்று தினமும் ஒரு நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். நடிகர்களுடன் படம...

நாட்டை திருத்துவதற்காக அரசியலுக்கு வரப்போவது போன்று தினமும் ஒரு நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

நடிகர்களுடன் படம் எடுத்துக் கொள்ள வாய்ப்புக் கிடைக்காதா? என்று ஏங்கிக் கொண்டிருக்கும் விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, அர்ஜுன் சம்பத், அதிமுகவின் வெற்றிவேல் உள்ளிட்ட அரசியல் சாணக்கியர்களை அழைத்துப் பேசி அரசியலுக்கு வருவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறாராம் இந்த யோக்கியர்.

தமிழ்நாட்டின் சிஸ்டத்தை சரி செய்வது தான் இவரது நோக்கமாம். அடக்கடவுளே… சிஸ்டத்தை சரி செய்வது பற்றியெல்லாம் யார் பேசுவது என்று விவஸ்தை இல்லையா? சீர்திருத்தங்களைப் பற்றிப் பேச ரஜினிக்கு என்ன தகுதி இருக்கிறது.

ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களுக்கு வாங்கிய சம்பளத்துக்கு உண்மையான கணக்கு காட்டியிருக்கிறாரா? கணக்கு காட்டிய பணத்துக்கு முறையாக வரி செலுத்தியிருக்கிறாரா? ரஜினியை வைத்து திரைப்படம் தயாரித்த தயாரிப்பாளர்களை விசாரித்தால் தெரிந்து விடும்.

66 வயதாகும் ரஜினிகாந்த் இதுவரை 160 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அவற்றில் முதல் 100 படங்களுக்கு அவரது ஊதியம் ஒரு கோடிக்கும் குறைவு தான். அடுத்த 50 படங்களுக்கு சராசரியாக 5 முதல் 8 கோடி வரை ஊதியம் வாங்கியிருப்பார்.

கடைசியாக நடித்த 10 படங்களுக்கு 20 கோடியில் தொடங்கி ரூ.40 கோடி வரை ஊதியம் வாங்கியிருப்பார். அதிகபட்சமாகவே வைத்துக் கொண்டாலும் அவர் இதுவரை சட்டப்படி வாங்கிய ஊதியத்தின் மதிப்பு ரூ.900 கோடி மட்டுமே.

சம்பாதித்த பணத்தை முதலீடு செய்ததில் கிடைத்த லாபத்தை கணக்கில் கொண்டாலும் கூட அதிகபட்சமாக ரூ.3000 கோடி வரை இருக்கலாம். ஆனால், கர்நாடகத்தில் மட்டும் ரூ.12,000 கோடிகளை ரஜினி முதலீடு செய்திருக்கிறார்.

தமிழகத்தில் அவரது சொத்து மதிப்பு குறைந்தது ரூ. 5000 கோடி என்கிறார்களே? அந்த சொத்துக்கள் எப்படி வந்தன? ஒன்று அவை கணக்கில் காட்டப்படாமல் சம்பாதித்த பணமாக இருக்க வேண்டும் அல்லது சட்டவிரோதமாக சம்பாதித்த பணமாக இருக்க வேண்டும்.

இப்படிப்பட்டவர் தான் தமிழகத்தை திருத்தப் போகிறாராம். மிஸ்டர் 420! போய் காசு சம்பாதிக்கும் வேலையை பாருங்கள். அது தான் உங்களுக்கு ஒத்துவரும். சேவைக்கும் உங்களுக்கும் வெகுதூரம்.

அதையும் மீறி நீங்கள் அரசியலுக்கு வந்தால் அனைத்து வீடுகளிலும் எழுதி வைக்கப்படும் வாசகம், ‘‘ யோக்கியன் வருகிறான் சொம்மைத் தூக்கி உள்ளே வை’’ என்பதாகத் தான் இருக்கும்.

மேலும் பல...

4 comments

  1. sir, Rajini Karnakavil vaithirukkum 12000 cr asset pathiyum ..tamil nadula irukindra 5000 cr asset details kodutheengana konjam nalla irukkumm.. naan antha details nirya perukku anuppa konjam vasathiyaa irukkum sir please

    ReplyDelete

Blog Archive

Search This Blog