அனுபவம்
சினிமா
நிகழ்வுகள்
ரத்னவேல் பாண்டியனை ஓவர்டேக் செய்வாரா தீரன் திருமாறன்? - இயக்குநர் பதில்
July 03, 2017
'சதுரங்க வேட்டை' படத்துக்குப் பிறகு, வினோத்தின் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம், 'தீரன் அதிகாரம் ஒன்று' இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்திருக்கிறது. படத்தின் டைட்டிலில் இருக்கும் ஃபயர், படத்தில் எந்த அளவுக்கு இருக்கும் என்பது பற்றித் தெரிந்துகொள்ள இயக்குநர் வினோத்தைத் தொடர்புகொண்டோம்.
'' 'தீரன் அதிகாரம் ஒன்று', ஒரு நேர்மையான போலீஸ் ஆபீஸரை மையமாகவைத்த கதைதான். இதற்காக, இந்தியா முழுக்கப் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். 2005-ம் ஆண்டு செய்தித்தாளில் ஒரு செய்தி படித்தேன். அதைப் பற்றி படம் பண்ணலாம் என்று தோன்றியது. அந்தச் செய்தியை பேஸ் பண்ணி ஒரு கம்ப்ளீட் ஆக்ஷன் படத்துக்கான கதையை எழுதிவைத்தேன். அதுதான் இப்போது, 'தீரன் அதிகாரம் ஒன்று' என உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் தீரன் திருமாறன் என்கிற கதாபாத்திரத்துக்காகக் கார்த்தியைப் பல போலீஸ் ஆபீஸர்களிடம் பயிற்சி எடுக்க வைத்தேன். 'சதுரங்க வேட்டை' படம், வசனத்துக்காகவே வெற்றி அடைந்தது என்ற பேச்சை உடைக்க வேண்டும் என்பதற்காகவே விஷூவல், ஆக்ஷனை பெரிதாகக் காட்டி, இந்தப் படத்தை எடுக்க நினைத்திருந்தேன். அதற்காக நிறைய எஃபெக்ட் போட்டிருக்கிறேன். படம் பார்க்கிற ஆடியன்ஸ் அதை ஃபீல் பண்ணுவாங்க. சிறுத்தை படத்தில் கார்த்தி நடிச்ச ரத்னவேல் பாண்டியன் என்கிற போலீஸ் கேரக்டரும் இந்தப் படத்தில் அவர் நடித்திருக்கும் கேரக்டரும் எந்த இடத்திலும் ஒத்துப்போகாது.
'சதுரங்க வேட்டை'யில் ஒரு பெரிய ஹீரோ நடிச்சிருந்தா, தியேட்டரில் ஆடியன்ஸ் சப்போர்ட் கிடைச்சிருக்கும். தியேட்டரில் பார்த்தவர்களைவிட, டிவிடி, நெட்டில் பார்த்தவர்கள்தான் அதிகம். தயாரிப்பாளருக்குப் பாதிப்பு ஏற்படாமலிருக்க, இந்தப் படத்தை ஒரு பெரிய ஹீரோவை வைத்து எடுக்கிறேன். இது ஒரு கமர்ஷியல் படமாக இருக்கும், 'தீரன்' என்கிற டைட்டிலை சுசீந்திரன் சார் பதிவு பண்ணியிருந்தார். தயாரிப்பாளருக்காக வேண்டி, அந்த டைட்டிலை சுசீந்திரன் சார் விட்டுக்கொடுத்தார். இதற்காக நான், அவருக்குப் பெரிய நன்றி சொல்லிக்கொள்கிறேன். இந்தப் படத்தை வட மாநிலங்களில் ஷூட் பண்ணினோம். அங்கு வெயில் கடுமையாக இருந்ததால், படப்பிடிப்புக் குழு மிகவும் சிரமத்துக்கு உள்ளானது. பலர் மயங்கி விழுந்த சம்பவமும் நடந்தது. எங்களுக்குத் தேவையான உதவிகளை புரொடக்ஷன் டீம் நல்லபடியா செய்து கொடுத்தாங்க. எல்லாருடைய உழைப்பும் சேர்ந்த 'தீரன் அதிகாரம் ஒன்று' நிச்சயமாக மக்கள் மனதில் இடம்பிடிக்கும்'' என நம்பிக்கையுடன் கூறினார் வினோத்.

0 comments