சினிமா
திரைவிமர்சனம்
நிகழ்வுகள்
சென்னையில் ஒரு நாள்-2 - (முதல் பாகத்துடனே) இருந்திருக்கலாம்
October 20, 2017
சரத்குமார், ராதிகா, பிரகாஷ்ராஜ் என பல நட்சத்திரங்கள் கூட்டணியில் வெளிவந்து ஹிட் அடித்த படம் சென்னையில் ஒரு நாள். இப்படத்தின் இரண்டாம் பாகமாக நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது JPR இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ள படம் சென்னையில் ஒரு நாள்-2. முந்தைய பாகத்தை போல் இதுவும் கவர்ந்ததா? பார்ப்போம்.
கதைக்களம்
சரத்குமார் போலீஸ் டிப்பார்ட்மெண்ட்டில் உயர் அதிகாரியாக இருக்கின்றார், படத்தின் முதல் காட்சியே ஏஞ்சலின் மரணம் இன்றா? நாளையா? என ஒரு போஸ்டர் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து இந்த சம்பவத்தின் தீவிரத்தை அறிந்த சரத்குமார் களத்தில் இறங்கி ஏஞ்சல் யார்? என்பதை தேட முயற்சிக்கின்றார். ஒவ்வொரு இடமாக இவர் தேடி சென்றாலும் எங்குமே ஏஞ்சல் யார் என்பதை கண்டுப்பிடிக்க முடியவில்லை.
பிறகு தான் அவருக்கு ஒரு கட்டத்தில் தெரிகின்றது, இப்படி ஒரு விஷயத்தை செய்துவிட்டு, போலிஸாரின் கவனத்தை திசை திருப்பி, மர்ம கும்பம் ஒன்று வேறு ஏதோ பெரிய விஷயத்தை செய்யவிருக்கின்றது என்று. அந்த விஷயம் என்ன? சரத்குமார் அதை கண்டுப்பிடித்து சதி செயலை முறியடித்தாரா? என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
சரத்குமார் ஒரு சில வருடங்களுக்கு பிறகு திரையில் பார்ப்பது சந்தோஷம் தான். மேலும், ஒரு ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் கூடுதல் எதிர்ப்பார்ப்பு, ஆனால், இது சரத்குமாருக்கான களமாக தெரியவில்லை. பெரிதும் அவர் படத்தில் தன் நடிப்பை பதிய வைத்தது போல் எந்த இடத்திலும் தோன்றவில்லை.
படத்தின் டைட்டிலேயே சென்னையில் ஒரு நாள் இந்த முறை கோயம்புத்தூரில் என்று தான் விளம்பரப்படுத்தியுள்ளார்கள். படம் முழுவதும் ஒரு வீட்டை சுற்றி தான் கதை நடக்கின்றது, சில காட்சிகளில் கோயம்புத்தூர் போர்டை காட்டுகின்றனர்.
இதற்கு இவர்கள் சென்னையில் என்றே படத்தை தொடங்கியிருக்கலாம், மேலும், படத்தின் கதையை கேட்கும் போது மிக சுவாரசியமாக இருக்கும், புதிய மருந்து, மெமரிலாஸ் என பல விஷயங்கள் இருந்தாலும் அதற்கான காட்சிகள் வலுவாக இல்லை என்பதே உண்மை.
படத்தின் பட்ஜெட் மிக குறைவு என்பது டெக்னிக்கல் விஷயங்கள் பார்க்கும் போதே தெரிகின்றது, ஆனால், அதையும் தாண்டி Jakes Bejoy-யின் பின்னணி இசை மிரட்டல்.
க்ளாப்ஸ்
கதைக்களம், மிக சுவாரசியமான ஒரு கதையை கையில் எடுத்துள்ளனர்.
Jakes Bejoy-ன் பின்னணி இசை.
பல்ப்ஸ்
ஒரு நல்ல கதையை படமாக்கிய விதம், திரைக்கதையில் எந்த ஒரு இடத்திலும் சுவாரசியம் ஏற்படவில்லை.
மொத்தத்தில் சென்னையில் ஒரு நாளுடனே (முதல் பாகத்துடனே) இருந்திருக்கலாம்.

0 comments