விமர்சனங்கள் தான் இந்தியாவை ஒளிர வைக்கும்’ -மெர்சல் பட எதிர்பாளர்களுக்கு கமல் பதிலடி

தீபாவளி தினத்தன்று உலகம் முழுவதும் வெளியான மெர்சல் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி, மற்று...

தீபாவளி தினத்தன்று உலகம் முழுவதும் வெளியான மெர்சல் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி, மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம் பெற்றிருப்பதாக தமிழக பா.ஜ.க வினர் கடுமையாக குற்றம்சாட்டி வந்தனர்.

படத்தில் இருந்து குறிப்பிட்ட காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தனர். பலர் பா.ஜ.க வின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நடிகர் கமல் மெர்சல் பட சர்ச்சை குறித்து தனது கருத்தினை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அதில் , “ஒரு படைப்பை இருமுறை சென்சார் செய்யாதீர்கள். மெர்சல் திரைப்படம் ஏற்கெனவே சென்சார் செய்யப்பட்டுவிட்டது. விமர்சனங்களை தெளிவான புரிதலுடன் கூடிய விளக்கங்களால் எதிர்கொள்ளுங்கள். விமர்சகர்களை வாயடைக்க செய்யாதீர்கள்.  விமர்சனங்கள் தான் இந்தியாவை ஒளிர வைக்கும் ” என மெர்சல் படத்தை எதிர்ப்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் கமல்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About