அஜீத்தை மாற்றிய விவேகம்! இனி அலட்டல் இல்லை

அஜீத்தை கடவுளாக பார்க்கும் ரசிகர்களால் கூட, விவேகம் படத்தை ஓட வைக்க முடியவில்லை. கூட்டிக் கழித்து கணக்கு போட்டு பார்த்தால், அவ்வளவும் அன்பு...

அஜீத்தை கடவுளாக பார்க்கும் ரசிகர்களால் கூட, விவேகம் படத்தை ஓட வைக்க முடியவில்லை. கூட்டிக் கழித்து கணக்கு போட்டு பார்த்தால், அவ்வளவும் அன்புச்செழியனின் வட்டிக்கு கூட தேறாத அளவுக்குதான் வசூல்! இருந்தாலும் படம் வெளிவந்த ஒரு வாரம் வரைக்கும் இந்திய திரையுலக சரித்திரத்தையே புரட்டிப் போட்ட படம் விவேகம் என்றெல்லாம் கூறி வந்தனர் ரசிகர்கள். ஆசை வேறு. நிஜம் வேறு என்பதை உணர்த்துகிற அறிவிப்புகளில் ஒன்றுதான் விசுவாசம்.

அதே சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கு நஷ்டத்தை சரி செய்யும் விதத்தில் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் அஜீத். இந்த புதிய படத்தின் தலைப்புதான் விசுவாசம். கடந்த சில வாரங்களாக சினிமா பிரமுகர்களே கூட தனியார் தொலைக்காட்சி விவாதங்களில் விவேகம் நஷ்டம் என்று சொல்லி வருவதும் அதை சத்யஜோதி தியாகராஜன் கண்டு கொள்ளாமலிருப்பதும் சில பல விஷயங்களை மவுனமாக அறிவித்து வருகிறது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். தன் படங்கள் வரும்போதெல்லாம் அப்படத்தின் தலைப்பை அறிவிக்கவே மாதக் கணக்கில் இழுப்பது அஜீத்தின் ஸ்டைலாக இருந்தது. விவேகம் என்கிற தலைப்பே படம் முடிகிற நேரத்தில்தான் சொல்லப்பட்டது. இந்த அலட்டல் படத்தின் வெற்றிக்கு துளியும் உதவப்போவதில்லை என்பதை முதன் முறையாக உணர்ந்திருக்கிறார் அஜீத். அதனால்தான் இந்த முறை படப்பிடிப்புக்கு முன்பே விசுவாசம் என்ற தலைப்பை ரசிகர்களுக்கு தெரிவித்திருக்கிறார்.

அதுமட்டுமல்ல… ஒரு சினிமா என்றால் அதன் சடங்கு சம்பிரதாயங்கள் என்னவோ? அது விசுவாசத்தில் நடக்கட்டும் என்று பச்சைக் கொடி காட்டிவிட்டாராம். இனி குறித்த நேரத்தில் பர்ஸ்ட் லுக் வரும். ட்ரெய்லர் வரும். படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவும் பிரமாண்டமாக நடக்கும். இந்த மாற்றத்தின் அவசியத்தை உணர்ந்து கொண்ட அஜீத், மீண்டும் முருங்கை மரம் ஏறாமலிருக்க வேண்டும். அதுதான் ரொம்ப முக்கியம்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About