சினிமா
திரைவிமர்சனம்
ஸ்கெட்ச் திரைவிமர்சனம்
January 16, 2018
தமிழ் சினிமாவில் கதைக்கு தேவையென்றால் தன்னை எந்த அளவிற்கும் வருத்தி நடிக்கக்கூடியவர் நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் ஸ்கெட்ச். இப்படத்தின் மூலம் சரியான ஸ்கெட்ச் போட்டு மக்களை கவர்ந்தாரா? இல்லையா? என்பதை பார்ப்போம்.
கதைக்களம்
வட சென்னையில் வண்டிகளுக்கு பைனான்ஸ் கொடுக்கும் சேட்டு ஒருவரிடம் வேலை செய்கிறார் ஸ்கெட்ச் விக்ரம்.
விக்ரம் ஸ்கெட்ச் போட்டால் மிஸ் ஆகாது என கூறும் அளவுக்கு டியூ கட்டாதவர்களின் வண்டிகளை நண்பர்களோடு சேர்ந்து தூக்குவதில் அவர் கில்லாடி. ஐயர் வீட்டு பெண்ணான தமன்னாவை துரத்தி துரத்தி காதலிக்கிறார்.
காதல் ஒருபுறமிருக்க, எதிர் கேங் ஆர்.கே.சுரேஷுடன் அடிக்கடி சிறிய மோதல் நடக்கிறது. அதுமட்டுமின்றி பிரபல தாதாவான குமாரின் காரை திட்டம் போட்டு தூக்குகிறார் விக்ரம். அங்கு ஆரம்பிக்கிறது அவருக்கும் அவர் நண்பர்களுக்கும் பெரிய சிக்கல்.
அதற்கு யார் காரணம் என்பதை நம்மை யூகிக்க விடாமல், எதிர்பார்க்காத கிளைமாக்ஸுடன், மீதி கதையை காட்டியுள்ளார் இயக்குனர் விஜய் சந்தர்.
படத்தை பற்றிய

அலசல்
படத்திற்கு படம் தோற்றத்தில் வித்தியாசம் காட்டும் விக்ரம் இந்த படத்திலும் ரசிகர்களை ஏமாற்றவில்லை. வழக்கம்போல நடிப்பிலும் அசத்தியுள்ளார். ஸ்கெட்ச் போட்டு வண்டியை தூக்குவது, காதல், நண்பர்கள் சென்டிமென்ட் என படத்தின் பல இடங்களில் அவரது நடிப்புக்கு தியேட்டரில் க்ளாப்ஸ் அள்ளுகிறார்.
ஹீரோயின் தமன்னாவுக்கு பெரிய ரோல் இல்லை என்றாலும், கச்சிதமாக நடித்துள்ளார்.
தமனின் பாடல்கள் படத்தில் ஸ்பீட் பிரேக்கர்களாக மட்டுமே இருந்தன.
க்ளாப்ஸ்
விக்ரமின் நடிப்பு,
தமன் இசை,
சென்ட்டிமெண்ட் காட்சிகளை சரியாக கையாண்ட விதம்.
பல்ப்ஸ்
ஸ்பீட் பிரேக்கர்களாக வரும் பாடல்கள். யமஹா ஸ்கூட்டர் விளம்பரத்திற்காக ஒரு பாட்டு வெச்சதெல்லாம் டூமச்.
விக்ரம் தவிர மற்ற கதாபாத்திரங்கள் எதுவுமே அழுத்தமாக இல்லாதது.
அவுட்டேட்டட் கதை.
மெசேஜ் சொல்ல வேண்டும் என்பதற்காகவே எழுதப்பட்ட கிளைமாக்ஸ் படத்தின் கதையோடு சுத்தமாக ஒட்டாமல் போனது.
மொத்தத்தில் ஸ்கெட்ச் வழக்கமான வடசென்னை மாஸ் மசாலா படம்.

0 comments