"பரம்பரை "யின் உண்மையான பொருள்!

நாம் ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி பேசும்  பொழுது, பரம்பரை பரம்பரையாய் இருக்கிறது  என்று சொல்வதுண்டு... பரம்பரை என்றால் என்ன? வழி வழியாக  ...

நாம் ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி பேசும்
 பொழுது, பரம்பரை பரம்பரையாய் இருக்கிறது
 என்று சொல்வதுண்டு...

பரம்பரை என்றால் என்ன? வழி வழியாக
 என்று சொல்லலாம் என்றாலும்,
 "தலைமுறை தலைமுறையாக"
என்பதே உண்மை பொருள் ஆகும்.

அப்படியென்றால், பரம்பரை என்பது முந்தைய தலைமுறையை குறிக்கும் சொல்லா? ஆம்!..
பரன் + பரை = பரம்பரை
 நமக்கு அடுத்த தலைமுறைகள்:
நாம்
 மகன் + மகள்
 பெயரன் + பெயர்த்தி
 கொள்ளுப்பெயரன் + கொள்ளுப்பெயர்த் தி
 எள்ளுப்பெயரன் + எள்ளுப்பெயர்த்தி

 நமக்கு முந்தைய தலைமுறைகள்:

நாம் - முதல் தலைமுறை

 தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை

 பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை

 பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை

 ஓட்டன் + ஓட்டி -
ஐந்தாம் தலைமுறை

 சேயோன் + சேயோள் -
ஆறாம் தலைமுறை

 பரன் + பரை - ஏழாம் தலைமுறை

 ஒரு தலைமுறை - சராசரியாக 60 வருடங்கள்
 என்று கொண்டால்,
ஏழு தலைமுறை - 480 வருடங்கள்..
ஈரேழு தலைமுறை - 960 வருடங்கள்..
 (கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள்)
ஆக, பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன்
 பொருள் ஈரேழு, பதினான்கு தலைமுறையாக
 என்று பொருள் வரும்.
எனக்கு தெரிந்து, வேறெந்த மொழிகளிலும்
 இப்படி உறவு முறைகள் இல்லை..

இதுவும் தமிழுக்கு ஒரு தனிச் சிறப்பு!..

உங்கள் நண்பர்களுக்கு தெரிய பகிரவும் !!

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About