எங்க வீட்டு மாப்பிளை முடிவுக்கு பிறகு ஆர்யாவின் முதல் ட்வீட் இது தான் ! !

தமிழ் டெலிவிஷன் துறையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமே இல்லை. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான ...

தமிழ் டெலிவிஷன் துறையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமே இல்லை. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான ஷோவாக பார்க்கப்பட்டது ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிளை ஷோ தான்.

கடைசி சுற்றுக்கு வந்த சுசானா, சீதாலட்சுமி மற்றும் ஆகாதா யாரை ஆர்யா கரம் பிடிக்கப்போகிறார் என்ற ஆவல் ரசிகர்களுக்கு ஏற்பட்டது. ஆனால் கடைசியில் எனக்கு கொஞ்சம் நேரம் வேண்டும், தற்போதைய சூழ்நிலையில் என்னால் முடிவு எடுக்க முடியவில்லை என கூறி அந்த ஷோவை முடிவுக்கு கொண்டு வந்த எஸ்கேப் ஆனார் ஆர்யா .

இதனால் தொடர்ந்து பார்த்து வந்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இது உண்மையான ரியாலிட்டி ஷோ கிடையாது, மக்களை ஏமாற்றி விட்டனர் என ரசிகர்கள் கோபமடைந்தனர். அந்த ஷோ முடிந்த பின் ஆர்யா ட்விட்டர் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை, அவர் எப்போதும் ட்விட்டரில் ஆக்ட்டிவாக இருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களின் கேள்விக்கு பயந்து வரவில்லை என்று ட்விட்டர் போராளிகள் கிண்டல் செய்ய தொடங்கினர் . அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் சிறிது நேரத்துக்கு முன்பு, வழக்கம் போல் மற்றவர்களை ஊக்குவிக்கும் குணம்கொண்ட ஆர்யா முதல் டீவீட்டாக நடிகர் மஹேந்திரனின் உடற்பயிற்சியை ஊக்குவித்த வாழ்த்துக்களை கூறினார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About