என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா திரைவிமர்சனம் - நேரம் போவதே தெரியவில்லை. சல்யூட் கொடுக்கலாம்..

தமிழ்ப்படங்களுக்கிடையே கடும் போட்டி நிலவும் இந்த சூழலில் தெலுங்கு படம் ஒன்று தமிழில் டப்பிங் ஆகி வெளியாகியுள்ளது. முக்கிய படங்களுக்கான வரவே...

தமிழ்ப்படங்களுக்கிடையே கடும் போட்டி நிலவும் இந்த சூழலில் தெலுங்கு படம் ஒன்று தமிழில் டப்பிங் ஆகி வெளியாகியுள்ளது. முக்கிய படங்களுக்கான வரவேற்புகிடையில் சில படங்கள் வழிவிட்டு ஒதுங்கி விடும் நேரம் இது. ஒரு ராணுவ கதையை தாங்கி கம்பீரமாக இறங்கியுள்ளது என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா.

மனதை ஈர்த்து மக்களிடம் இடம் பெறுமா என உள்ளே சென்று பார்ப்போம்.

கதைக்களம்

அல்லு ஒரு நேர்மையான ராணுவ வீரர். அவருக்கென உடும்பு பிடி கொள்கை. எந்த ஒரு விசயத்துக்காகவும் தன்னை சமாதானப்படுத்திக்கொள்ளமாட்டார். ஒரு வகையில் இவருக்கு மைனஸாக அமைகிறது.

ராணுவ எல்லைக்கு எப்படியாக போக வேண்டும் என நீண்ட நாள் கனவில் இருக்கிறார். ஆனால் அவருக்கே ஒரு சிக்கல் இருக்கிறது. இதற்கிடையில் சின்ன வயதில் வீட்டை விட்டு செல்லும் அவருக்கு பெரும் சவால்.

நடிகர் அர்ஜூன் ஊரில் மட்டுமல்ல இந்தியளவில் நல்ல புகழ் பெற்ற மனநல மருத்துவர். அல்லுவுக்கு மீண்டும் வேலையில் சேர இவரின் சான்றிதழ் தேவைப்படுகிறது. இவரின் மனைவி நதியா. இருவரின் மகன் வீட்டை விட்டு சிறு வயதிலேயே போய்விடுகிறார்.

இதற்காக அல்லு இவரை தேடி வருகிறார். ஆனால் வந்த இடத்திலும் பெரும் சிக்கல். ஒரு கட்டத்தில் அர்ஜூன்க்கும் அல்லுவுக்கும் கருத்து மோதல்கள். அல்லுவுக்கு 21 நாட்கள் சவால் விடப்படுகிறது.

இந்த கால கட்டத்தில் அவருக்கு பல சிக்கல்கள். இதற்கிடையே ஊரில் பெரும் கட்டப்பஞ்சாயத்து பேசி நில மோசடி செய்யும் சரத்குமாருக்கும் இவருக்கும் கடும் மோதல்.

ஆக அல்லு 21 நாள் சோதனையில் ஜெயித்தாரா. மீண்டும் தன் கனவான ராணுவ எல்லையை அடைந்தாரா, அர்ஜூனின் தொலைந்த மகன் கிடைத்தாரா என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றி அலசல்

அல்லு அர்ஜூன் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர். அவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. தமிழில் அவ்வளவாக படத்தில் நடிக்கவில்லை? இருப்பினும் தமிழ்நாட்டில் அவரின் படம் எப்படி என கேள்வி கேட்கலாம். தன் நடிப்பால் இப்படத்தில் ஸ்டைலிஸ்ட் ஸ்டார் என தனக்கான டைட்டிலை தக்கவைக்கிறார்.

படத்தில் ஒவ்வொரு இடங்களில் அவரின் ஹார்டு ஒர்க் தெரிகிறது. வழக்கமான தெலுங்கு படங்களை போல் இல்லாமல் இப்படம் இயல்பான படம் போலவே இருந்தது.

அர்ஜூன் ஒரு அனுபவம் வாய்ந்த நடிகர். அவருக்கான இடத்தை படம் முழுக்க நிறைவு செய்கிறார். அண்மைக்காலமாக படங்களில் ஸ்பெஷல் ரோலில் வந்து போகும் அவருக்கு சாத்தியாமான ரோல் தான்.

நிபுணன் படத்திற்கு பிறகு ஒரு முக்கித்துவமான ரோல். அவரை கடைசியாக தன் மகளை வைத்து இயக்கிய சொல்லிவிடவா ரோல் பெரிதளவில் இடம் பெறாமல் போய்விட்டது.

மூத்த நடிகையான நதியா இப்படத்தில் ஒரு சில காட்சிகள் தான். ஆனால் பல வருடங்களாக கண்ணுக்கு தெரியாமல் எங்கேயோ இருந்த மகன் மீண்டு வந்ததும் அப்படியான ஒரு பேரானந்தம் முகத்தில். இன்னும் அதே இளமையுடன் அவரை பார்க்கும் போது எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி ரோல் கண்முன் வந்துபோகலாம்.

சரத்குமார் கல்லாவாக ஊரையே தன் கைக்குள் வைத்திருக்க நினைப்பவர். அவருக்கான ரவுடித்தனம் இப்படத்தில் பெரிதளவில் இல்லை. இயல்பாகவே அமைந்திருக்கிறது. தன்னை பார்த்து பயந்தவர்கள் மத்தியில் கடைசியில் இவருக்கே ஒரு தலை குனிவு இருக்கிறது. மனம் மாறினாரா என்பது தான் சீக்ரட்.

இயக்குனர் வம்சி இப்படத்தில் சொல்ல வந்ததை நிதானமாக சொல்லி புரியவைக்கிறார். ஒளிப்பதிவாளர் காட்சிகள் நகர்த்திய விதம் கதைக்குள் கதையாக மெதுவாக உள்ளே போகவைக்கிறார்கள்.

கிளாப்ஸ்

அல்லுவின் ஸ்டைலிஸான நடிப்பு. ரியல் ஆர்மி மேனாகவே மாறியிருக்கிறார்.

இயக்குனரின் விறுவிறுப்பான கதை நகர்வு சிம்பிளான பயணம்.

காமெடிக்கு ஸ்பெஷல் ஆர்ட்டிஸ்ட் இல்லையெனினும் ஓரிரு டபுள் மீனிங் வசனம் ரசிகர்களை திருப்தி.

பல்ப்ஸ்

கதையை இன்னும் கொஞ்சம் சுருக்கியிருக்கலாம் என தோன்றியது.

சில இடங்களில் தெலுங்கு படங்களுக்கே உண்டான ஓவர் எமோஷனல் ஸ்டண்ட்.

படத்திற்கு பாடல் பெரியளவில் ஈர்க்கவில்லை.

மொத்தத்தில் என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா நேரம் போவதே தெரியவில்லை. சல்யூட் கொடுக்கலாம்..

மேலும் பல...

1 comments

  1. Please don't write no more Movie review. If you don't know some thing then don't do it. Thanks.

    ReplyDelete

Search This Blog

Blog Archive

About