தனது மய்யத்தின் அபாய சங்கை வெளியிட்ட கமல்ஹாசன் !

நடிகர் கமல்ஹாசன் அரசியலில் களமிறங்கி மக்கள் நீதி மையம் என்ற பெயரில் கட்சியும் தொடங்கி விட்டார். இயல்பிலே விஞ்ஞான வளர்ச்சியின் தொழில்நுட்பத்...

நடிகர் கமல்ஹாசன் அரசியலில் களமிறங்கி மக்கள் நீதி மையம் என்ற பெயரில் கட்சியும் தொடங்கி விட்டார். இயல்பிலே விஞ்ஞான வளர்ச்சியின் தொழில்நுட்பத்தை தனது படங்களின் மூலம் அறிமுகப்படுத்தும் முதல் நபர்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் செயலியை கமல்ஹாசன் இன்று அறிமுகப்படுத்தினார். அப்போது அவர் பேசியதாவது, செயல்படும் செயலியாக மையம் செயலியை உருவாக்க காலதாமதம் ஏற்பட்டுவிட்டது. அதற்காக மன்னிக்க வேண்டும். பத்திரிகையாளர்கள் செய்யும் விஷயத்தை, சாமானியர்களும் செய்யத் தூண்டும் செயலி இது. இந்த செயலி நம்மைச் சுற்றி நடக்கும், நமது சூழலில் நடக்கும் மாசு, குற்றங்கள், ஊழல்கள் இவற்றை எல்லாம் தனி மனிதன் ஒரு அபாயச் சங்கு ஊதி தெரியப்படுத்தும் கருவி தான் இந்த விசில்.

அது எப்படியென்றால், உங்கள் பகுதியில் நடக்கும் தவறு, தொடர்ந்து நடக்கும் தவறுகள் அதை சொல்ல விரும்புபவர்கள், முதலில் பத்திரிகைக்கு எழுதுவார்கள். தற்போது முகநூலில் பதிவிடுகிறார்கள். அதைத்தொடர்ந்து வலியுறுத்தவோ, அது நடக்கிறதா, இல்லையா என்று பார்க்க யாரும் கிடையாது. அந்த மையமாக மய்யம், மக்கள் நீதி மய்யம் செயல்படும்.

இது இருக்கும் குறைகளை ஒரே நொடியில் தீர்த்து விடும் மந்திரக்கோல் அல்ல. இது இருக்கும் குறைகளை செவிசாய்த்து கேட்பதற்கும், கண்கொண்டு பார்ப்பதற்கும் உதவும் ஒருகருவி, தற்போதைக்கு இது எங்கள் கட்சியை சார்ந்தவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது என கூறினார்

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About