இதை செய்யவில்லை என்றால் இனி வடிவேலு சினிமாவில் நடிக்கவே முடியாது- ரசிகர்கள் அப்செட்

வடிவேலு பலரின் வாழ்க்கையை மாற்றியவர். ஆம், நம் மனதளவில் மிகவும் சோகத்தில் இருந்த போது கூட சிரிக்க வைத்து, நமக்கு புத்துணர்ச்சி கொடுத்தவர். ...

வடிவேலு பலரின் வாழ்க்கையை மாற்றியவர். ஆம், நம் மனதளவில் மிகவும் சோகத்தில் இருந்த போது கூட சிரிக்க வைத்து, நமக்கு புத்துணர்ச்சி கொடுத்தவர்.

ஆனால், அவர் அரசியல் சென்று படமே நடிக்க முடியாமல் இருந்தது எல்லாம் அனைவரும் அறிந்ததே.

நீண்ட இடைவேளைக்கு பிறகு வந்த வடிவேலு இனி கலக்குவார் என்று எதிர்ப்பார்த்தால், மீண்டும் பெரும் பிரச்சனையில் சிக்கியுள்ளார்.

இம்சை அரசன் இரண்டாம் பாகத்தில் வடிவேலு நடிக்க முடியாது என்று சென்றதால் சுமார் ரூ 9 கோடி வரை நஷ்டம், இப்படத்தின் தயாரிப்பாளர் ஷங்கர் அவர் நடித்து கொடுக்கவேண்டும் என்கின்றார்.

வடிவேலு மேலும் ரூ 2 கோடி கொடுங்கள் நடிக்கின்றேன் என்கின்றார், இவை தயாரிப்பாளர் சங்க பஞ்சாயத்திற்கு வர, விஷால், வடிவேலுவிடம் பேசியும் சுமூகமாக முடியவில்லையாம்.

இதனால், வடிவேலு ரூ 9 கோடி கொடுக்க வேண்டும், இல்லையென்றால் படத்தில் நடிக்கவேண்டும், இது நடக்கவில்லை என்றால், வடிவேலுவிற்கு ரெட் போட்டு, இனி படங்களிலேயே நடிக்க முடியாதப்படி செய்துவிடுவார்கள் என தெரிகின்றது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About