அனுபவம்
நிகழ்வுகள்
வங்கியில் நிகழ்ந்த கொள்ளை... திருடியது யார் தெரியுமா?... தெரிந்தால் ஆடிப்போயிடுவீங்க
May 29, 2018
இந்திய மாநிலமான தமிழகத்தில் திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 8 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த வழக்கில் அந்த வங்கியில் பணி புரியும் ஊழியர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 32 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் சூப்பர் மார்கெட் கட்டிடம் ஒன்று உள்ளது. அந்த கட்டிடத்தின் மாடி பகுதியில் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி இயங்கி வருகிறது. நேற்று வழக்கம் போல் வங்கியை திறக்க முயன்றபோது பூட்டு திறந்தே இருந்ததது.
இதனால் அதிர்ச்சியடைந்த மேனேஜர், பணம் வைக்கப்பட்டிருந்த லாக்கர் மற்றும் அறைகளை சென்று பார்த்த போது லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 6 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைககள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
உடனடியாக பொலிசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர்கள் வந்து விசாரணை நடத்தியுள்ளனர். வங்கியின் பூட்டுக்கள் உடைக்கப்படவில்லை, சுவற்றில் ஓட்டை எதுவும் போடப்படவில்லை. ஆனால் லாக்கரில் இருந்த நகை மட்டும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இதனால் வங்கியில் பணி புரியும் ஊழியர்கள் இந்த கொள்ளையில் சம்பந்தப்பட்டிருப்பார்களோ என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் அதே வங்கியில் பணி புரியும் 3 பேர் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த 3 பேரையும் கைது செய்த பொலிசார் அவர்களிடமிருந்து 32 கிலோ நகைளை பறிமுதல் செய்தனர். வங்கி ஊழியர்களே கொள்ளை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments