காலா ரஜினிக்கு போட்டியாக மோதலில் இறங்கும் பிரம்மாண்ட படம்! கடும் சவாலில் ஜெயிக்கப்பபோவது யார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் வரும் ஜூன் 7 ம் தேதி வெளியாகவுள்ளது. ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் வரும் ஜூன் 7 ம் தேதி வெளியாகவுள்ளது. ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது.

ஏற்கனவே ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த இப்படம் ஸ்டிரைக் காரணாமாக தள்ளிப்போனது. ரஜினி படங்களுக்கு உலகளவில் நல்ல வரவேற்பு இருக்கிறது என்பதை கபாலி ஏற்கனவே நிரூபித்து விட்டது.

இந்நிலையில் இப்படத்திற்கு பெரும் சவாலாக ஹாலிவுட் சினிமாவில் அதிக கலெக்‌ஷன்களை பெற்ற ஜூராசிக் பார்க் படத்தின் அடுத்த பாகம் ஜூன் 8 ல் 2300 தியேட்டர்களில் உலகம் முழுக்க வெளியாகவுள்ளது.

ஜூராசிக் வேர்ல்ட் ஃபாலன் கிங்டம் என்ற இப்படத்தை ஃபயோனா இயக்கியுள்ளார். இவர் ஜுராசிக் பார்க் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பில்ஸ்பெர்க்கிடம் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவராம்.

இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என 4 மொழிகளில் வெளியாகிறது. எனவே காலாவுடன் போட்டியில் இறங்கும் இந்த பிரம்மாண்ட படத்தால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

ஜெயிக்கப்பபோவது யார் என பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About