விஜய் நடிக்கும் சர்க்கார் படத்திற்கு வந்த சிக்கல்! புதிதாக வந்த சர்ச்சை

முருகதாஸ் இயக்கும் விஜய் நடித்து வரும் படத்திற்கு சர்க்கார் என டைட்டில் வைத்து விட்டார்கள். விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக இது அறிவிக்கப்பட்டதும...

முருகதாஸ் இயக்கும் விஜய் நடித்து வரும் படத்திற்கு சர்க்கார் என டைட்டில் வைத்து விட்டார்கள். விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக இது அறிவிக்கப்பட்டதும் ரசிகர்கள் கொண்டாடிவிட்டார்கள்.

ஆனால் போஸ்டரில் விஜய் கையில் சிகிரெட் வைப்பது போல இருந்தது சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில் வழக்கறிஞர் தமிழ்வேந்தன் என்பவர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதில் அவர் சினிமா பிரபலங்களை பலரும் தங்கள் ரோல் மாடலாக பின்பற்றி வருகிறார்கள். இன்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.

விஜய்யின் சர்க்கார் போஸ்டரில் சிகிரெட் இடம் பெற்றுள்ளது. இதை இயக்குனரிடம் சொல்லி நீக்க வேண்டும். இது போன்ற காட்சிகளை பார்க்கும் இளம் தலைமுறையினரை சிகிரெட் பிடிக்க தூண்டும்.

இதனால் இளைய தலைமுறை சீரழிய வாய்ப்புள்ளது. புகையிலைப்பொருட்களை தடை செய்யப்பட்டுள்ளது. பல கொள்ளைகளுக்கு சினிமாதான் காரணமாக இருக்கிறது என அவர் கூறியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About