தொப்பையை குறைக்க தினமும் 3 நிமிடம் இப்படி பண்ணுங்க போதும்!

உடல் எடை குறைப்பு குறித்து பலரும் பலவாறாக முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதீத உடல் எடையினால் ஏற்படுகிற உடலியல் மாற்றங்கள், நோய் பாத...

உடல் எடை குறைப்பு குறித்து பலரும் பலவாறாக முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதீத உடல் எடையினால் ஏற்படுகிற உடலியல் மாற்றங்கள், நோய் பாதிப்புகள் குறித்தெல்லாம் நிறைய பேசப்படுவதால் மக்கள் மத்தியில் தொப்பை மற்றும் உடல் எடை குறித்த ஒர் பயம் வந்திருக்கிறது.

முன்பை விட இன்றைக்கு பலரும் உடல நலனில் அக்கறை செலுத்துகிறார்கள். உடல் எடையை குறைக்க வேண்டும். ஆனால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை என்பவர்களுக்காகத் தான் இந்த தகவல். கலோரியை குறைக்க பல முயற்சிகள் முன்னெடுக்கப்படுகிறது.

அவற்றில் ஜப்பானியர்கள் செயல்படுத்தும் இந்த விஷயம் புதுமையாக தெரிந்தாலும் நல்ல பலனைக் கொடுப்பதாக சொல்லப்படுகிறது.

முதலாவது பயிற்சி

தூங்கும் போது தவறான முறையில் படுப்பது கூட சிலருக்கு முதுகு வலி, தொப்பை ஆகியவற்றை ஏற்படுத்தும். வயிற்று தசைகளுக்கு அதிக வேலை கொடுக்காது தொப்பையை வரவைத்திடும். இதனை சரி செய்தாலே எடை அதிகரிப்பு பிரச்சனையை குறைத்துவிடலாம் என்கிறார் ஜப்பான் மருத்துவர் டோஷிகி.

இது முதுகுவலி, இடுப்பு வலி ஆகியவற்றிற்கும் சிறந்த தீர்வாக அமைந்திடும். அதோடு இது வயிற்று தசையையும் வலுவாக்கும்.

இரண்டாவது பயிற்சி

இந்த பயிற்சிக்கு முதலில் ஒரு டவலை எடுத்து அதனை நன்றாக ரோல் செய்து கொள்ளுங்கள். ஏற்ற இறக்கங்களோடு இல்லாமல் எல்லா பக்கமும் சமமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

இப்போது தரையில் உட்கார்ந்து கால்களை நீளமாக நீட்ட வேண்டும். அப்படியே தரையில் படுத்துக்கொள்ளுங்கள். படுத்ததும் கையில் வைத்திருக்ககூடிய டவலை உங்களின் இடுப்பகுதிக்கு அருகே வைக்க வேண்டும்.

இந்த பயிற்சியை தரையில் மேட் விரித்து செய்யலாம். மெத்தையில் வேண்டாம். அதே போல இப்படி படித்திருக்கும் போது கால்களை 8 முதல் 10 இன்ச் கேப்பில் உள்கூடி திரும்பியிருப்பதாக பார்த்துக் கொள்ளுங்கள்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About