காமராஜருக்கு மெரினாவில் இடம் தர மறுத்தாரா கருணாநிதி? உண்மை இதுதான்

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு தமிழக அரசால் அனுமதி மறுக்கப்பட்டபோது காமராஜருக்கு மெரினாவில் இடம் தர மறுத்தவர...

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு தமிழக அரசால் அனுமதி மறுக்கப்பட்டபோது காமராஜருக்கு மெரினாவில் இடம் தர மறுத்தவர் கருணாநிதி, அதனால் இது சரியானது தான் என்ற தகவல் சமூகவலைதளங்களில் பரவி வந்தது.

இந்த தகவல் உண்மையானது என்பது குறித்து அப்போது காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளராக இருந்த பழ.நெடுமாறன் கூறியதாவது,

காமராஜர் மறைந்ததும், அவரது உடலுக்கு தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் இறுதி சடங்குகள் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், அப்போதைய முதல்வர் கருணாநிதி, காமராஜர் ஒரு சுதந்திர போராட்ட வீரர் என்பதால், காந்தி மண்டபத்தில் வைத்து இறுதி சடங்குகள் செய்யுங்கள், அதுவே பொருத்தமாக இருக்கும் என்று தானே முன்வந்து கூறினார்.

பின்னர் அங்குதான், காமராஜர் உடல் தகனம் செய்யப்பட்டது. மேலும், காந்தி மண்டபத்தில், காமராஜருக்கு நினைவிடம் அமைக்க நிலம் அளித்தவரும் கருணாநிதிதான். மெரினாவில் காமராஜருக்கு இடம் ஒதுக்க காங்கிரஸ் சார்பில் கோரிக்கைவிடுக்கப்படவில்லை.

இப்போதுள்ள தலைமுறையினர், பேஸ்புக், வாட்ஸ்அப்பில் வரும் அறியாத கருத்துக்களை உண்மை என நினைக்கிறார்கள். அதை பரப்புகிறார்கள். உண்மையை கண்டறிய அக்கறை காட்டுவதில்லை என்று பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

மேலும், சமூகவலைதளங்களில் தவறான தகவல் பரவி வருகிறது என கூறியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About