சிலை திருட்டு வழக்கில் சிக்கிய பிரபல இயக்குனரின் அம்மா! சாமீ… வேர் ஆர் யூ?

நீதிக்கு தலை வணங்குவதாக சொல்லும் பலர், நிஜத்தில் என்ன பண்ணுகிறார்கள் என்று நோட்டமிட்டால் அவ்வளவும் வெட்கக் கேடாக இருக்கும். அப்படியொரு கேடு...

நீதிக்கு தலை வணங்குவதாக சொல்லும் பலர், நிஜத்தில் என்ன பண்ணுகிறார்கள் என்று நோட்டமிட்டால் அவ்வளவும் வெட்கக் கேடாக இருக்கும். அப்படியொரு கேடு என்றே வைத்துக் கொள்ளுங்களேன் இதையும்.

டிஜிட்டல் இந்தியாவின் சுருட்டல் சூட்சுமத்தை போட்டு தாக்கிய படம் இரும்புத்திரை. விஷால் நடிப்பில் உருவான இப்படம், அவரது கேரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமும் கூட. அப்படியெல்லாம் நாடு கொண்டாடிய படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் யார்? அவரது பின்புலம் என்ன? என்றெல்லாம் ஆராய்ந்தால்தான் அதிர்ச்சி மிஞ்சுகிறது. அண்மையில் சிலை தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்ட அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா, பி.எஸ்.மித்ரனின் அம்மா.

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார் அவர். பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாக கூறுகிறார்கள். அதுமட்டுமல்ல… நாடு முழுவதுமிருக்கிற கோவில்களை பராமரிக்கும் அதிகாரமும் இவருக்கு இருந்ததால், இன்னும் எங்கெல்லாம் என்னவெல்லாம் திருட்டு கொள்ளை போயிருக்கிறது என்ற கோணத்தில் விசாரித்து வருகிறது போலீஸ்.

அப்படியே வண்டியை டேர்ன் பண்ணி, மித்ரன் படம் இயக்கிய விஷயத்திலும் தன் கூரான பார்வையை போலீஸ் செலுத்தியிருக்கிறது என்பதுதான் திடுக் ஷாக். இந்த விஷயத்தில் நடிகர் விஷால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளாராம். ஒருவேளை லட்சமோ, கோடியோ மித்ரன் அக்கவுன்டிலிருந்து விஷால் அக்கவுன்ட்டுக்கு கைமாறி இருந்தால், விஷால் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்கிறார்கள் திரையுலகத்தில்.

பல வருடங்களாக கோவிலில் சும்மாவே இருக்கும் சாமிகள், இனிமேலும் சும்மாயிருந்தால் மட்டுமே இவர்களால் தப்பிக்க முடியும்.

சாமீ… வேர் ஆர் யூ?

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About