Tamilrockers: தமிழ்ராக்கர்ஸ் எவ்வாறு படங்களை திருடுகின்றனர்?

பிரபல நட்சத்திரங்களின் திரைப்படம் வெளியாகும் போதெல்லாம் தமிழ்ராக்கர்ஸ்ஸூம் பிசியாகி கோலிவுட்டுக்கு தலைவலியாக இருந்து வருகின்றனர். திரைப்படங...

பிரபல நட்சத்திரங்களின் திரைப்படம் வெளியாகும் போதெல்லாம் தமிழ்ராக்கர்ஸ்ஸூம் பிசியாகி கோலிவுட்டுக்கு தலைவலியாக இருந்து வருகின்றனர். திரைப்படங்களை திருடி இணையதளங்களில் தெறிக்க விட்டு விடுகின்றனர்.

இதனால், படம் வெளியாவதற்கு முன்பிருந்தே இணையத்தில் திருட்டுத்தனமாக படம் வெளியாகாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்புக்கு தமிழ் திரையுலகம் தள்ளப்பட்டுள்ளது. பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் உலகம் முழுவதும் வெளியாகிறது. குறிப்பாக இவர்களது படங்கள் இந்தியாவில் வெளியாவதற்கு முன்பே வெளிநாடுகளில் வெளியாகி விடுகிறது. அங்கிருந்து இந்தப் படங்களை தியேட்டர்களில் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு விடுகின்றனர் தமிழ்ராக்கர்ஸ்.

தமிழ்ராக்கர்ஸில் வெளியானது விஸ்ரூபம் 2!

இதைத்தடுக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ''ஆன்டி பைரசி செல்'' செயல்படுகிறது. இந்த அமைப்பும் சமீபத்தில் கோயம்புத்தூர் மற்றும் மலேசியாவில் காலா படத்தை தியேட்டர்களில் திருட்டுத்தனமாக பதிவு செய்தவர்களை கையும் களவுமாக பிடித்தது.

தென்னிந்திய மொழிகளில் திருட்டு:
கோயம்புத்தூரில் தமிழ்ராக்கர்ஸ் அட்மின்களில் சிலர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சர்வதேச அளவில் இயங்கி வந்ததும் தெரிய வந்தது. தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் இவர்கள் திருட்டுத்தனமாக படங்களை இணையத்தில் வெளியிட்டு வந்ததும் தெரிய வந்தது.

ஒவ்வொரு முறையும் இவர்கள் வெவ்வேறு இணையத்தின் பெயரில் திருட்டுத்தனமாக படங்களை வெளியிடுவதால், இவர்களை கண்டறிவதும் சிக்கலாக உள்ளது. கிக்காஸ் டோரன்டோ என்ற இணையமும் இந்த வேலையைத்தான் செய்து கொண்டு இருந்தது. இதன் உரிமையாளர் ஆர்டம் வவ்ளின் போலந்தில் கைது செய்யப்பட்டபோது, தமிழ்ராக்கர்ஸ் சுதந்திரமாக உலவி வந்தனர். சர்வதேச அளவில் தமிழ்ராக்கர்ஸ் கொடி பறக்கத் துவங்கியது.

எவ்வாறு படங்களை திருடுகின்றனர்?
* படத்தின் தயாரிப்பாளர் சில தேர்வு செய்யப்பட்ட தியேட்டர்களில் ரிவியூவ் என்ற பெயரில் படங்களை திரையிடுகின்றனர்
* தமிழ்ராக்கர்ஸ் அமைப்பில் இருந்து சிலர் தியேட்டர் ஸ்கிரீனிங் ஏஜென்ட் அல்லது திரையரங்கு ஊழியர்களை தொடர்பு கொள்வார்கள்
* திருட்டுத்தனமாக படத்தை பிரின்ட் எடுக்க ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுப்பார்கள்

இப்படியும் செய்வார்கள்... World Film Distribution (W.F.D)
* 2 அல்லது 3 சர்வர்களில் படத்தை பதிவேற்றம் செய்வார்கள்
* படத்தை 2 அல்லது 4 பாகங்களாக பல்வேறு சர்வர்களில் சேமித்து வைப்பார்கள்
* படம் துவங்குவதற்கு முன்பு இந்த சர்வருக்கும், தியேட்டருக்கும் லிங்க் கொடுத்து விடுவார்கள்.
* சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் பல ஸ்கிரீன்கள் காட்டப்படும். அந்த சமயங்களில் தியேட்டர் ஊழியரிடம் அதிக பணம் லஞ்சமாகக் கொடுத்து, லேப் டாப்பில் பதிவு செய்வார்கள். ஆபரேட்டரும் ஒரு லிங்கை புரஜெக்டருக்கும், மற்றொரு லிங்கை லேப் டாப்பிற்கும் கொடுத்து விடுவார். பல ஸ்கிரீன்கள் காட்டப்படுவதால் சந்தேகமும் வராது.

திருட்டில் மூன்றாம் விதம்:
* கேமரா அல்லது செல்போன் வழியாக பதிவு செய்யப்படும்
* மெட்ரோ நகரங்களில் இது நடப்பதில்லை. இரண்டாம் தர நகரங்களில் மட்டுமே நடக்கிறது

இந்தியாவில் அதிகம்...
திருட்டுத்தனமாக இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் படங்களை இந்தியாவில் அதிகளவில் பார்க்கின்றனர். இந்தியாவில் தான் அதிகளவில் திருட்டுத்தனமாக பதிவேற்றம் செய்யப்படும் படங்களை பதிவிறக்கம் செய்கின்றனர்.

இந்தியாவில் பாகுபலி, தெறி, தில்வாலே, சுல்தான் ஆகிய படங்கள் அதிகளவில் பதிவிறக்கம் செய்து பார்க்கப்பட்டுள்ளது.

வருமானம்:
popAds, popMyAds, Propeller Ads Media, Dynamic Oxygen, Exit Junction, Blacklabelads, BuzzBizz இவர்கள்தான் திருட்டுத்தனமாக இயங்கும் தமிழ்ராக்கர்ஸ் போன்றவர்களை ஊக்குவித்து வருமானம் ஏற்படுத்திக் கொடுப்பவர்கள். ஒரு கிளிக்கிற்கு இவ்வளவு வருமானம் என்று நிர்ணயிக்கப்படுகிறது. கூகுள் ஒருபோதும் திருட்டு செய்திகளை விளம்பரப்படுத்தாது.

TFPC ANIT PIRACY CELL:
tfpc anti piracy cell வந்த பின்னர் சற்று திரைப்பட திருட்டும் குறைந்துள்ளது என்று கூறலாம். இன்னும் விழிப்புணர்வு தேவை.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About