அனுபவம்
நிகழ்வுகள்
எதற்கும் அதிமுக தலைமைக்கழகத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஜெ. சிலையை பார்த்துக்கோங்கப்பா…!ஜெயலலிதாவின் பயோ பிக்! இதாவது ஓடுமா விஜய்?
August 19, 2018
“கடைசியா வந்த ‘வனமகன்’ கூட வளமா ஒடலையேப்பா… அப்பறம் அவருக்கு மட்டும் எப்படி தொடர்ந்து படம் கிடைக்குது?” கோடம்பாக்கமே குத்தவச்சு உட்கார்ந்து கேட்கும் முக்கியமான கேள்வி இது. பெரும்பாலும் இங்கிலீஷ் படங்களை அப்படியே உல்டா அடித்து தமிழில் தருகிற அரும்பணியை கடந்த பல வருடங்களாகவே செய்து வருகிறார் ஏ.எல்.விஜய். அதில் சில… படம்! பல… பப்படம்!
இந்த நிலையில்தான் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகப்போகிறது. தமிழகத்தில் எந்த அரசியல் தலைவருடைய கதையையும் 100 சதவீத உண்மையோடு எடுத்துவிட முடியாது. அட… அதில் ஐந்து சதவீத உண்மையை தெளித்துவிட முடியும் என்ற நம்பிக்கையாவது பலிக்குமா என்றால் அதற்கும் வாய்ப்பில்லை. ஏடியெம்கே வின் நிலைமை அப்பளத்தை நாலா உடைச்சு, அதையும் நாற்பதா உடைச்ச கதையாக இருக்கும் போது, இந்த படத்தை தயாரித்து யாருக்கெல்லாம் போட்டுக் காட்ட வேண்டி வருமோ?
இந்த ரிஸ்க் ஒரு புறம் இருக்க… ஜெ.வின் கேரக்டரில் நடிக்கப் போகும் நடிகை யாரென்று இன்னும் அறிவிக்கவில்லை. அவர் மட்டும் பொருத்தமான நடிகையாக இல்லாதிருந்தால் என்னாகும்?
எதற்கும் அதிமுக தலைமைக்கழகத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஜெ. சிலையை பார்த்துக்கோங்கப்பா…! கதை அப்படி முடிஞ்சுரப்போவுது?

0 comments