October 05, 2018
பிக்பாஸை மிஞ்சிய சொப்பன சுந்தரி... சண்டைக்கு பஞ்சமில்லாத ஷோ!
October 05, 2018<
பிரபல சன் லைஃப் தொலைக்காட்சியில் சொப்பன சுந்தரி என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளனர். சன் லைஃப் தொலைக்காட்சிக்கு புத்துயிர் அளிக்கிறார்கள்.அக்டோபர் 7ம் தேதியில் இருந்து புது சன் லைஃபை பார்க்கலாம் என்று விளம்பரம் செய்து வருகிறார்கள். இந்த புது சன் லைஃபில் 10 மாடல் அழகிகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.சொப்பன சுந்தரிஅமெரிக்காஸ் நெக்ஸ்ட் டாப் மாடல் நிகழ்ச்சி போன்று சொப்பன சுந்தரி என்ற நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். ரியாலிட்டி நிகழ்ச்சியான இதில் வளர்ந்து வரும் மாடல் அழகிகள் 10 பேர் கலந்து கொள்கிறார்கள். சொப்பன சுந்தரி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியை நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்குகிறார். இதற்கு தான் சர்கார் இசை வெளியீட்டில் பயிற்சி எடுத்தாரா பிரசன்னா என்று நெட்டிசன்கள் கேட்கிறார்கள்.சண்டை பஞ்சமிருக்காதுதென்னிந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஒரு மாடல் அழகியை தேர்வு செய்ய நடக்கும் நிகழ்ச்சி சொப்பன சுந்தரி. ஒரு வீட்டில்...