பிக்பாஸை மிஞ்சிய சொப்பன சுந்தரி... சண்டைக்கு பஞ்சமில்லாத ஷோ!

பிரபல சன் லைஃப் தொலைக்காட்சியில் சொப்பன சுந்தரி என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளனர். சன் லைஃப் தொலைக்காட்சிக்கு புத்துயிர் அளிக்கி...

பிரபல சன் லைஃப் தொலைக்காட்சியில் சொப்பன சுந்தரி என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளனர். சன் லைஃப் தொலைக்காட்சிக்கு புத்துயிர் அளிக்கிறார்கள்.

அக்டோபர் 7ம் தேதியில் இருந்து புது சன் லைஃபை பார்க்கலாம் என்று விளம்பரம் செய்து வருகிறார்கள். இந்த புது சன் லைஃபில் 10 மாடல் அழகிகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

சொப்பன சுந்தரி

அமெரிக்காஸ் நெக்ஸ்ட் டாப் மாடல் நிகழ்ச்சி போன்று சொப்பன சுந்தரி என்ற நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். ரியாலிட்டி நிகழ்ச்சியான இதில் வளர்ந்து வரும் மாடல் அழகிகள் 10 பேர் கலந்து கொள்கிறார்கள். சொப்பன சுந்தரி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியை நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்குகிறார். இதற்கு தான் சர்கார் இசை வெளியீட்டில் பயிற்சி எடுத்தாரா பிரசன்னா என்று நெட்டிசன்கள் கேட்கிறார்கள்.

சண்டை பஞ்சமிருக்காது

தென்னிந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஒரு மாடல் அழகியை தேர்வு செய்ய நடக்கும் நிகழ்ச்சி சொப்பன சுந்தரி. ஒரு வீட்டில் நிறைய மாடல் அழகிகள் இருந்தால் சண்டைக்கு குறைவே இருக்காது. ப்ரொமோ வீடியோவிலேயே சண்டை பலமாக நடக்கிறது. பேச்சு பேச்சாக இல்லாமல் கைகலப்பில் முடிகிறது.
பிக் பாஸ் முடிஞ்ச என்ன சொப்பன சுந்தரி இருக்கே

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி முடிந்துவிட்டதால் சொப்பன சுந்தரியை பார்க்க நிச்சயம் பெரிய கூட்டம் கூடும் என்று எதிர்பார்க்கலாம். ப்ரொமோவே பயங்கரமாக இருக்கிறது. நிகழ்ச்சியில் இதை விட சண்டை, சச்சரவு எல்லாம் தூக்கலாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. ரசிகர்களுக்கு வார இறுதி நாட்கள் பரபரப்பாக இருக்கும்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About