அனுபவம்
சினிமா
திரைவிமர்சனம்
நிகழ்வுகள்
நோட்டா கொஞ்சம் தடுமாற்றத்துடன் வாக்களிக்கும் மனநிலை தான்-திரைவிமர்சனம்
October 05, 2018
விஜய் தேவரகொண்டா தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் நடிகர். ஏற்கனவே தெலுங்கு சினிமாவில் ரூ.100 கோடி வசூலை பெற்ற இளம் நாயகன் என்ற பெயர் இவருக்கு உள்ளது. அதுமட்டுமின்றி ஒரு தெலுங்கு நடிகருக்கு மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் தமிழகத்தில் இருக்கின்றது என்றால் அது இவருக்கு தான், அதன் காரணமாக தமிழில் நேரடியாக நோட்டா மூலம் விஜய் தேவரகொண்டா களம் இறங்கியுள்ளார், மக்கள் இந்த நோட்டாவிற்கு வாக்களித்தார்களா? பார்ப்போம்.
கதைக்களம்
தமிழகத்தின் முதல்வர் நாசர் மீது ஒரு வழக்கு விழுகின்றது. அதற்காக இரண்டு வாரத்திற்கு டம்மி முதலமைச்சராக அவருடைய மகன் விஜய் தேவரகொண்டாவை அந்த பதவியில் பதவியேற்க வைக்கின்றார்.
ஆனால், அவருக்கோ அரசியலில் அ, ஆ கூட தெரியவில்லை. இரண்டு வாரத்தில் நாசருக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்று நினைக்கின்றனர்.
யாரும் எதிர்ப்பார்க்காத விதமாக அவருக்கு 5 ஆண்டுகள் தண்டனை விதிக்க, அடுத்த 5 ஆண்டுக்கு விஜய் தேவரகொண்டா முதலமைச்சர் ஆக அதன் பிறகு நடக்கும் அரசியல் ஆட்டம், மாற்றம் என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
விஜய் தேவரகொன்டா தமிழில் அறிமுகமாகும் முதல் படம், அட தமிழே தெரியாமல் ஒருத்தர் இவ்வளவு சூப்பராக டப் செய்துள்ளார் என்றால் கண்டிப்பாக பாராட்ட வேண்டிய விஷயம். தனக்கே உரிய ரவுடி ஸ்டைலில் இன்றைய இளைஞர்களை ஈஸியாக கவர்ந்து இழுக்கின்றார்.
தமிழகத்தில் நடக்கும் அத்தனை பிரச்சனைகளையும் அப்படியே கதையாக மாற்றியுள்ளனர். வாரிசு அரசியல், குனிந்து கும்புடு போடுவது, செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிடுவது, கூவத்தூர் ரிசார்ட் கொண்டாட்டம் என நிகழ்கால அரசியலை கண்முன் கொண்டு வந்துள்ளனர்.
ரசிகர்களும் காட்சிகள் அறிந்து கைத்தட்டி ரசிக்கின்றனர். அதிலும் குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடுவது எத்தனை சுமூகமாக முடிக்கலாம் என்பதை படத்தில் காட்டிய விதம் சூப்பர் ஆனந்த் ஷங்கர்.
ஆனால், இத்தனை இருந்தும் படம் முழுதும் ஏதோ செயற்கை தனம் ஒட்டி வருகின்றது. ஒரு வேளை தெலுங்கு பட ஹீரோ என்பதாலோ அல்லது காட்சியே அப்படியா என்று தெரியவில்லை.
அதை விட பல இடங்களில் அநியாயத்திற்கு லாஜிக் மீறல், அதிலும் பினாமி பணத்தை எடுக்கும் காட்சி எல்லாம் காதில் பூ தான். கிளைமேக்ஸும் அத்தனை வலுவாக அமையவில்லை.
படத்தின் பல காட்சிகளை தாங்கி பிடிப்பது சாமின் இசை தான், பின்னணியில் மிரட்டியுள்ளார். ஒளிப்பதிவும் செட் என்றாலும் தன்னால் முடிந்த அளவிற்கு யதார்த்தமாக காட்ட முயற்சித்துள்ளனர்.
க்ளாப்ஸ்
விஜய் தேவரகொண்டா ஒன் மேன் ஆர்மி, தமிழே தெரியவில்லை என்றாலும் சூப்பராக பேசி தன் நடிப்பில் மிரட்டுகின்றார்.
படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள் இசை, ஒளிப்பதிவு போன்றவை.
நிகழ்கால அரசியலில் நடக்கும் காட்சியை படமாக்கிய விதம்.
பல்ப்ஸ்
படத்தில் தெரியும் நிறைய செயற்கை தனமான காட்சிகள்.
படத்தின் செட் அப்படியே தெரிகின்றது. பணத்தை கைப்பற்றும் காட்சி லாஜிக் எல்லை மீறல்.
மொத்தத்தில் நோட்டா கொஞ்சம் தடுமாற்றத்துடன் வாக்களிக்கும் மனநிலை தான்.

0 comments