வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை இந்த எண்ணெயில தொட்டு சாப்பிட்டா சளி பறந்திடுமாம்

மழைக்காலம் வந்துட்டாலே சலதோஷம் நம்மளை பிடித்து விடும். சலதோஷம் வந்தாலே காய்ச்சல், சளி, இருமல் என்று அசெளகரியமாக தோன்ற ஆரம்பித்து விடும். இந...

மழைக்காலம் வந்துட்டாலே சலதோஷம் நம்மளை பிடித்து விடும். சலதோஷம் வந்தாலே காய்ச்சல், சளி, இருமல் என்று அசெளகரியமாக தோன்ற ஆரம்பித்து விடும்.

இந்த மாதிரியான சலதோஷம் சமயங்களில் சில உணவுகள் உங்களுக்கு நிவாரணம் அளிக்கும். அதைப் பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காண போகிறோம்.

பூண்டு பற்கள்

பூண்டு சலதோஷத்திற்கு சிறந்த மருந்து. இதிலுள்ள அல்சின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து சலதோஷத்திலிருந்து நிவாரணம் அளிக்கிறது. எனவே சலதோஷ சமயங்களில் பூண்டை நசுக்கியோ அல்லது மாத்திரை வடிவிலோ சாப்பிடுங்கள்.

டீ

சலதோஷத்திற்கு டீ சிறந்த நிவாரணத்தை அளிக்கும். கொஞ்சம் சூடாக சாப்பிடும் போது உங்களுக்கு தொண்டைக்கு நிவாரணமாகவும் இருக்கும். தேயிலையுடன் சோம்பு விதைகள் சேர்த்து பருகும் போது சலதோஷம் குறையும். மிளகு டீ கூட நீங்கள் பருகலாம். இது சளியை வெளியேற்றுவதோடு இருமலுக்கு உதவும்.

சிக்கன் நூடுல்ஸ் சூப்

ஜேவிஸ் பென்சிலின் என்ற சிக்கன் சூப்பை கூட நீங்கள் பருகலாம். ஏராளமான காய்கறிகள், சிக்கன் சேர்த்து இந்த சூப்பை தயாரிக்கலாம். இதன் அழற்சி எதிர்ப்பு தன்மை சுவாசப் பாதையில் ஏற்பட்டுள்ள அழற்சியை போக்கும். கண்டிப்பாக இது உங்களுக்கு பிடித்தமானதாக இருக்கும்.

சிட்ரஸ் பழங்கள்

ஆரஞ்சு, திராட்சை போன்ற விட்டமின் சி அடங்கிய உணவுகள் சளியை குறைக்க உதவுகிறது. அதே நேரத்தில் இதை சரியான அளவு மட்டும் எடுத்து கொள்ளுங்கள். அதிகமாக எடுக்க வேண்டாம். செரல் தாறியங்களுடன் ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து சாப்பிடுங்கள்.

பால்

விட்டமின் டி நமது எலும்புகளை வலுவாக்க பயன்படுகிறது என்பது தெரியும். அதே நேரம் இது நமது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. யோகார்ட், சீஸ், பச்சை காய்கறிகள், சால்மன், பட்டர் மற்றும் முட்டை போன்றவற்றை எடுத்து கொள்ளுங்கள்.

தேன்

தேன் தீப்பட்ட காயங்கள், வெட்டுகள் போன்றவற்றிற்கு பயன்படுகிறது. இதை சாப்பிடும் போது அதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் வைரஸை அழிக்கிறது. மேலும் தொண்டைக்கு நல்ல இதத்தை தருகிறது. மலைத்தேனில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இதை கொஞ்சமாக டீயில் கலந்து கொள்ளுங்கள்.

சர்க்கரை வள்ளிக் கிழங்கு

சர்க்கரை வள்ளிக் கிழங்கில் விட்டமின் ஏ அதிகளவில் உள்ளது. இது வெள்ளை அணுக்களை அதிகரித்து நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. சர்க்கரை வள்ளிக் கிழங்கை வேக வைத்து ஆலிவ் ஆயில் சேர்த்து மற்றும் மூலிகைகள் சேர்த்து சாப்பிடுங்கள். உங்கள் சலதோஷத்திற்கு நிவாரணம் அளிக்கும்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About