நீங்கள் அறிந்திராத வித்தியாசமான சில தோட்டக்கலை குறிப்புகள்!!!

தோட்டம் வைத்துப் பராமரிப்பது ஒரு மகிழ்ச்சியான பொழுதுபோக்கு. உங்கள் வாழ்கையை வண்ணமயமாக்கும் இது ஒவ்வொரு நாளும் ஒரு புதிய அனுபவத்தை எதிர்பார்...

தோட்டம் வைத்துப் பராமரிப்பது ஒரு மகிழ்ச்சியான பொழுதுபோக்கு. உங்கள் வாழ்கையை வண்ணமயமாக்கும் இது ஒவ்வொரு நாளும் ஒரு புதிய அனுபவத்தை எதிர்பார்த்துக் காத்திருக்க வைக்கும். உங்கள் முயற்சிகளில் முன்னேற இத்துறை வல்லுனர்களின் பல விதமான ஆலோசனைகளைப் பின்பற்றி வந்திருப்பீர்கள். ஆனால் உங்களுக்கு ஆர்வமூட்டக்கூடிய பல வித்தியாசமான உங்களுக்கு ஆச்சரியமூட்டக்கூடிய பலனைத் தரும் தோட்டக்கலை விவரங்கள் உள்ளன.

நீங்கள் தோட்டம் வைத்துப் பராமரிப்பது பொழுதுபோக்கோ அல்லது முழுநேரத் தொழிலோ, அதற்கென சிறந்த வழிகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம். பலர் பாரம்பரியமிக்க இயற்கையான வழிகளை பின்பற்றுகின்றனர்.ஆனால் வித்தியாசமான வழிகளைக் கண்டுபிடிக்க நீங்கல் சில முறைகளை முயன்று பார்க்கும் போது சில உடனடியான தீர்வுகள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது.

இதுப்போன்ற சில வித்தியாசமான முறைகளை நாம் கேட்கும் போது உங்களுக்கு அவை பைத்தியக்காரத்தனமாகத் தோன்றும். ஆனால் நீங்கள் சற்றும் எதிர்பாராத விதமாக அது நன்கு வேலை செய்யும். இதற்கு முன் பலரால் முயற்சி செய்து பார்க்கப்பட்ட முறைகள் உங்களுக்கும் உதவும். நீங்கள் முயன்று பார்க்க ஏற்கனவே சோதிக்கப்பட்ட இதுப்போன்ற வித்தியாசமான முறைகள் உங்களுக்காக இதோ.

முட்டை ஓடு

முட்டை ஓடுகளில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால், இது உங்கள் தோட்டத்தை செழுமையாக்க உதவும். உலர வைக்கப்பட்ட முட்டை ஓடுகள் ஒரு நல்ல உரமாக செயல்படும். அவற்றை குப்பையில் தூக்கி எறியாமல் நொறுக்கி மண்ணில் கலந்து விடுங்கள். ஏன் நீங்கள் விதைகளைக் கூட முட்டை ஓடுகளில் விதைத்து வளர்க்கலாம். உங்கள் விதைக்கு அது ஒரு சிறந்த சத்துமிக்க தொட்டியாக அது இருக்கும்.

எப்சம் உப்பு

எப்சம் உப்பு அதிக அளவு மக்னீசியம் மற்றும் சல்பேட் சத்துக்களைக் கொண்டது. தாவரங்கள் நன்கு வளர இது உதவி செய்யும். தக்காளி மற்றும் மிளகாய் ஆகியவை இதிலிருந்து அதிக பலனைப் பெறுகின்றன.

டயபர்கள் (diapers)

இவை நன்கு ஈரத்தை உறிஞ்சி தக்கவைத்துக் கொள்ளக்கூடியவை. ஆனால் இது தாவரத்திற்கு உதவும் என எப்போதாவது நினைத்ததுண்டா? டயபர் உரையைக் கிழித்து அதிலுள்ள ஜெல்லை தண்ணீரில் முக்கி எடுங்கள். அதை மண்ணோடு கலந்து விட்டால் இவை ஈரத்தை உறிஞ்சி செடிகள் காயாமல் நன்கு வளர உதவும். ஆனால் இவற்றை உணவுத் தாவரங்களில் உபயோகிப்பதை தவிருங்கள்.

முள் கரண்டிகள்

உங்கள் வீட்டிலுள்ள வளர்ப்புப் பிராணிகள் உங்கள் தோட்டத்தை சேதப்படுத்த வாய்ப்புகள் உள்ளன. இதனால் உங்கள் உழைப்பு வீணாக நேரிடுகிறது. ஆனால் நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. இதற்கு ஒரு நல்ல வழி இருக்கிறது. பிளாஸ்டிக்கினால் ஆன முள் கரண்டிகள் அல்லது ஸ்பூன்களை ஆங்காங்கே தோட்டத்தில் நட்டு வையுங்கள். இந்த ஒரு எளிமையான ஐடியா அவற்றை தள்ளி இருக்கச் செய்து தோட்டத்தை பாதுகாக்கும்.

பால் பவுடர்

கொஞ்சம் ஓவராத்தான் தெரியும். ஆனால், தக்காளிக்கு இது பெரிதளவில் ஊட்டச்சத்தாக இருப்பதாகப் பலர் கூறுகின்றனர். பால் பவுடரை மண்ணில் கலப்பதன் மூலம் ருசியான ரசம் மிகுந்த தக்காளிகளை பெற முடியும். முயன்று பார்த்து இனிமையான தக்காளிகளைப் பெறுங்களேன். இந்த குறிப்புகள் மிகவும் பலன் தரக்கூடியவை.

இனிய வெள்ளரிக்காய்

உங்களுக்கு வெள்ளரிக்காய் வழக்கத்தை விட இனிமையாய் இருக்க வேண்டுமா? அப்படியானால் வெள்ளரிச் செடியை சூரியகாந்திச் செடியின் அருகில் வளருங்கள். இவை இரண்டிற்குமே ஒரே மாதிரியான மண் போதுமானது. அதே நேரம் சூரியகாந்திக் கிளைகள் வெள்ளரிக் கோடி ஏற வசதியாக இருக்கும். இதுவும் ஒரு முக்கிய தோட்டக் குறிப்பு.

சமையல் கழிவு நீர்

காய்கறி வேக வைத்த மற்றும் பிற சமையல் வேலைக்குப் பின் கிடைக்கும் நீரை வீணாக்காமல் அதை செடிகளுக்குப் பயன்படுத்தலாம். ஏனெனில் இவற்றில் பல சத்துக்கள் உள்ளன. இந்த நீரை சூடு ஆறிய பிறகு சேமித்து வைத்து பின்னர் செடிகளுக்கு ஊற்றலாம். இது மிகவும் பயனுள்ள ஒரு தோட்டக் குறிப்பு.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About