அனுபவம்
நிகழ்வுகள்
இது எப்போ....? கேரளாவுக்கு நடிகை சன்னி லியோன் ரூ. 5 கோடி நிவாரண நிதியுதவியா?
August 21, 2018
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு பாலிவுட் நடிகை சன்னி லியோ ரூ. 5 கோடி நிவாரண நிதியுதவி செய்ததாக சமூக வலைதளத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. ஆயிரகணக்கான வீடுகள் நீரில் மூழ்கி, ஏராளமான மக்கள் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் கேரளாவுக்கு உதவிக்கரம் நீட்ட பல மாநிலங்களும் முன்வந்துள்ளன. திரைத்துறையினரும் தங்களின் பங்களிப்பை அளித்து வருகின்றனர். நடிகர் விஷால், சூர்யா, கார்த்தி உள்ளிட்டோரும் நிதியுதவி வழங்கியுள்ளார்.
இந்நிலையில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் ரூ. 5 கோடி நிவாரண நிதி வழங்கியதாக டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் பலர் பாராட்டி வருகின்றனர். ஆனால் இத்தகவலை சன்னி லியோன் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை.
இதனால் இது வெறும் வதந்தி என பலர் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அவர் நிதியுதவி செய்தது உண்மைதான் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அவரின் ரசிகர்கள் அவரின் அதிகாரப்பூர்வ தகவலுக்காக காத்திருக்கின்றனர்.
0 comments