3-வது குழந்தைக்கு நோ வாக்குரிமையாம்.. மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் பாபா ராம்தேவ்

நாட்டின் மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் 3-வதாக பிறக்கும் குழந்தைக்கு வாக்குரிமை தரக் கூடாது என யோசனை தெரிவித்துள்ளார் ப...

நாட்டின் மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் 3-வதாக பிறக்கும் குழந்தைக்கு வாக்குரிமை தரக் கூடாது என யோசனை தெரிவித்துள்ளார் பாபா ராம்தேவ்.

இந்தியாவின் மக்கள் தொகை அடுத்த 50 ஆண்டுகளில் 150 கோடிக்கு மேல் செல்லக் கூடாது. மக்கள் தொகை பெருக்கத்தை எதிர்கொள்ள நாம் இன்னமும் தயாராக இல்லை.

இதனால் மத்திய அரசு கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும். 3-வதாக பிறக்கும் குழந்தைக்கு வாக்குரிமை தரவும் கூடாது; தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்க வேண்டும். அரசின் எந்த சலுகையையும் தரக் கூடாது.

இதனால் 2 குழந்தைகளுக்கு மேல் பெறுவது தடுக்கப்படும். மேலும் நாடு தழுவிய அளவில் மதுவிலக்கை அமல்படுத்தப்பட வேண்டும். இஸ்லாமிய நாடுகளில் மதுவிற்பனைக்கு தடை இருக்கிற போது இந்தியாவில் ஏன் சாத்தியம் இல்லை?

அதேபோல் நாடு முழுவதும் மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவதையும் தடை செய்ய வேண்டும். அதன்மூலமே மாடுகளை கடத்துவோருக்கும் பசு பாதுகாப்பு இயக்கத்தினருக்கும் இடையேயான மோதல் முடிவுக்கு வரும். மாட்டுக்கறி சாப்பிட விரும்புவோர் வேறு மாமிசத்தை சாப்பிட்டுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு பாபா ராம்தேவ் கூறினார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About