விஷாலின் தந்தைக்கு நேர்ந்த கொடுமை! கைது செய்யப்பட்ட வடிவேலு

நடிகர் விஷால் தற்போது நடிகர் சங்க தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கிறார். கடந்த ஜூன் 23 ல் தேர்தல் நடைபெற்று முடிந்தது. பதவிக்கால...

நடிகர் விஷால் தற்போது நடிகர் சங்க தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கிறார். கடந்த ஜூன் 23 ல் தேர்தல் நடைபெற்று முடிந்தது. பதவிக்காலம் முடிவடைந்தும் நடிகர் சங்கம் கட்டப்படாமல் தள்ளிப்போனதால் அவரின் மீது பல அதிருப்திகள் எழுந்ததுள்ளது. இதனால் அவருடன் இருந்தவர்கள் பலர் பாக்யராஜ் அணிக்கு சென்றுவிட்டனர்.

இன்னொரு பக்கம் அவர் தன் திருமணத்தை நடிகர் சங்க கட்டிடத்தில் தான் நடத்த வேண்டும் என உறுதியில் இருக்கிறார். அவருக்கு திருமண நிச்சயதார்தத்தையும் அவரின் பெற்றோர் அண்மையில் நடத்தினர்.

இந்நிலையில் அவரின் அப்பா ஜி.கே. ரெட்டியிடம் ரூ 86 லட்சம் மோசடி செய்ததாக கல்குவாரி அதிபர் வடிவேலு என்பவரை சென்னை மத்திய குற்ற பிரிவு போலிசார் கைது செய்துள்ளனர்.

விஷாலின் தந்தை அளித்துள்ள புகாரில் தன்னுடைய குவாரியில் இருந்து கருங்கல், ஜல்லி தருவதாக கூறி தொழிலதிபர் வடிவேலு என்பவர் தன்னிடம் ரூ. 86 லட்சம் பணம் வாங்கியதாகவும் ஆனால் அவர் கருங்கல், ஜல்லியை கொடுக்காமலும் கொடுத்த பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி வருவதாக புகார் கூறியுள்ளார்.

இதையடுத்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலிசார் மதுரையைச் சேர்ந்த கல்குவாரி உரிமையாளர் வடிவேலுவை கைது செய்துள்ளனர்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About