இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி இதுதான்...

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அடுத்தடுத்து பல்வேறு அதிரடியான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த வரிசையில் அடுத்ததாக ஒரு அருமையான த...

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அடுத்தடுத்து பல்வேறு அதிரடியான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த வரிசையில் அடுத்ததாக ஒரு அருமையான திட்டத்திற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருட்களில் இயங்கும் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு மிக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. எனவே சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக உலகின் பல்வேறு நாடுகளும், பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை வேகமாக குறைத்து வருகின்றன. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கு அல்ல.
இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி இதுதான்...

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசானது, பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கான பதிவு கட்டணம் மற்றும் பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணங்களை மிக கடுமையாக உயர்த்த திட்டமிட்டு வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது.

அதே நேரத்தில் ஃபேம் இந்தியா திட்டத்தின் கீழ் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது. இது போன்ற நடவடிக்கைகள் எல்லாம் ஓர் உதாரணம் மட்டுமே. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக இன்னும் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

இந்தியாவின் பல்வேறு மாநில அரசுகளும் கூட எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் மிகவும் ஆர்வமாக உள்ளன. முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் ஆந்திர பிரதேசமும் இதில் ஒன்று. ஆந்திர மாநிலத்திற்கு சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது.

இதில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியை வீழ்த்தி ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. இதன்பின் முதல்வர் அரியணையில் ஏறிய ஜெகன்மோகன் ரெட்டி, பல்வேறு அதிரடியான திட்டங்களை வரிசையாக அறிவித்து வருகிறார். அவரது திட்டங்கள் எல்லாம் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் உள்ளன.
இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி இதுதான்...

இந்த சூழலில் ஆந்திர பிரதேச மாநில சாலை போக்குவரத்து கழகத்தை (Andhra Pradesh State Road Transport Corporation - APSRTC), ஆந்திர பிரதேச மாநில அரசுடன் இணைப்பதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. மிக நீண்ட காலமாக இருந்து வரும் தொழிலாளர்களின் பிரச்னைகளை களைவதற்கு இந்த இணைப்பு சரியான தீர்வு என தொழிற்சங்கங்களும் கருத்து தெரிவித்துள்ளன.

முன்னதாக இந்த இணைப்பில் உள்ள பிரச்னைகளை களைவதற்காகவும், வழிகாட்டு நடைமுறைகளை தயாரிப்பதற்காகவும் உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஏபிஎஸ்ஆர்டிசி-யின் முன்னாள் துணை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆஞ்சநேய ரெட்டி தலைமையில் இந்த உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதில், போக்குவரத்து துறையின் முதன்மை செயலாளர் கிருஷ்ணபாபு, நிதித்துறையின் முதன்மை செயலாளர் சத்தியநாராயணா உள்பட பல்வேறு உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த சூழலில் ஆந்திர மாநில முதல் அமைச்சர் ஒய்எஸ் ஜெகன்மோகன் ரெட்டியை இந்த உயர்மட்ட குழு சமீபத்தில் சந்தித்து பேசியது.

அப்போது ஆந்திர பிரதேச மாநில சாலை போக்குவரத்து கழகம் அதிகப்படியான எலெக்ட்ரிக் பஸ்களை இயக்க வேண்டும் என தான் விரும்புவதாக அவர்களிடம் ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார். அத்துடன் இதற்கான அனைத்து வழிகளையும் ஆராயும்படியும், அதன்பின் ஆந்திர பிரதேச மாநில சாலை போக்குவரத்து கழகத்தில் அதிக எலெக்ட்ரிக் பஸ்களை அறிமுகம் செய்யும்படியும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இதற்காக மத்திய அரசு வழங்கும் மானியங்கள் மற்றும் சலுகைகள் தொடர்பாக ஆராயும்படியும் அதிகாரிகளிடம் அவர் கேட்டு கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டீசலில் இயங்கும் பஸ்களை காட்டிலும் எலெக்ட்ரிக் பஸ்களை இயக்குவதற்கு செலவு குறைவாகதான் இருக்கும். இதன் மூலம் ஏபிஎஸ்ஆர்டிசி கணிசமான லாபம் ஈட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கும், ஜெகன்மோகன் ரெட்டிக்கும் பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிக்கும் விஷயத்தில் இருவரும் ஒன்றுபோலவே செயல்படுகின்றனர். எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் சந்திரபாபு நாயுடுவும் அதிக ஆர்வம் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி இதுதான்...

முன்னதாக தற்போதைய பொருளாதார நிலை, ஊழியர்களுக்கு வழங்க வேண்டியுள்ள சம்பள பாக்கி ஆகிய விஷயங்களை நன்கு ஆராயும்படியும், உயர்மட்ட கமிட்டியிடம் ஜெகன்மோகன் ரெட்டி கேட்டு கொண்டுள்ளார். அத்துடன் தொழிலாளர்களின் நலனை முன்னிறுத்தி, அதற்கேற்ப இணைப்பு வழிமுறைகளை உருவாக்கும்படியும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About