சீக்கிரமா எடையை குறைக்கணுமா? தினமும் இத்தனை கப் பிளாக் காபி குடிங்க போதும்...!

உலகில் அதிகமான மக்களால் குடிக்கப்படும் ஒரு பானம் காபி ஆகும். இந்தியாவில் பெரும்பாலனோர் பால் சேர்த்துதான் காபி குடிக்கிறார்கள். ஆனால் மற்ற ந...

உலகில் அதிகமான மக்களால் குடிக்கப்படும் ஒரு பானம் காபி ஆகும். இந்தியாவில் பெரும்பாலனோர் பால் சேர்த்துதான் காபி குடிக்கிறார்கள். ஆனால் மற்ற நாடுகளில் பெரும்பாலும் பிளாக் காபிதான் அனைவராலும் குடிக்கப்படுகிறது. மேற்கத்திய கலாச்சாரத்தில் புகழ் பெற்ற இந்த பிளாக் காபி பல் ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது.

பிளாக் காபி குடிப்பதற்கும், எடை குறைப்பிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இதில் அதிகளவு காஃபைன் உள்ளது, இதன் முக்கியமான பலன்களில் ஒன்று புற்றுநோய்க்கு எதிராக போராடுவதாகும். இந்த பதிவில் பிளாக் காபிக்கும், எடை குறைப்பிற்கும் இடையே இருக்கும் ரகசிய தொடர்பு என்னவென்று பார்க்கலாம்.

குளோரோஜெனிக் அமிலம்

எடை குறைப்பில் முக்கியப்பங்கு வகிக்கும் குளோரோஜெனிக் அமிலம் பிளாக் காபியில் அதிகம் உள்ளது. உணவுக்குப் பிறகு நீங்கள் கருப்பு காபியை உட்கொள்ளும்போது, அதில் உள்ள குளோரோஜெனிக் அமிலம் உடலில் குளுக்கோஸ் உற்பத்தியைக் குறைக்கிறது. மேலும் புதிய கொழுப்பு செல்கள் உருவாவதையும் தடுக்கிறது. காஃபின் மற்றும் குளோரோஜெனிக் அமிலம் நிறைந்த பிளாக் காபியை ஒருவர் குடிக்கும்போதுதான் இந்த செயல்முறை நடைபெறுகிறது. இதில் பால் சேர்க்கும்போது அது எடை குறைப்பிற்கு உதவாது. இது மட்டுமின்றி எடை குறைப்பிற்கு உதவும் பல ஆன்டி ஆக்சிடண்ட்களும் இதில் உள்ளது.

பசியை கட்டுப்படுத்தும்

பிளாக் காபியில் இருக்கும் காஃபைன் வளர்ச்சிதை செயல்பாட்டை தூண்டுவதுடன் ஆற்றலையும் அதிகரிக்கிறது, இது பசியை கட்டுப்படுத்துகிறது. ஒரு கப் பிளாக் காபியில் 5.4 கலோரிகள் உள்ளது, இது கலோரி இல்ல பானம் என்றும் அழைக்கப்படுகிறது. சர்க்கரை சேர்க்கப்படும் போது அது கலோரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

கலோரிகளின் மீதான தாக்கம்

பிளாக் காபி குடிப்பது உங்கள் தினசரி கலோரிகளின் அளவில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். கருப்பு காபி வளர்சிதை மாற்ற செயல்பாட்டைத் தூண்டுவதால், அது உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது மற்றும் அதிக கலோரிகளை எரிக்கிறது. எனவே தினமும் பிளாக் காபி குடிப்பது உங்களுக்கு எடை குறைப்பிற்கு உதவும். உடற்பயிற்சிக்கு முன் பிளாக் காபி குடிப்பது நீங்கள் அதிக கலோரிகளை எரிக்க உதவும்.

நீரின் அளவை குறைக்கும்

சிலர் உடலில் அதிக நீர் மற்றும் கொழுப்புகள் இருப்பதால் அவர்கள் குண்டாக காட்டலாம். பிளாக் காபி குடிப்பது உங்கள் உடலில் இருக்கும் நீரின் அளவை அடிக்கடி சிறுநீர் கழிக்க வைப்பதன் மூலம் குறைக்கும். இந்த முறையில் உங்கள் உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகளை பக்க விளைவுகள் இன்றி வெளியேற்ற உதவுகிறது.

எடை இழப்பு

பிளாக் காபி குடிப்பது உங்கள் உடலில் இருக்கும் நீரை சிறுநீர் மூலமாக வெளியேற்றி தற்காலிக எடை குறைப்பிற்கு உதவுகிறது. இதற்கு காரணம் இதில் அதிகளவு இருக்கும் காஃபைன்தான். நிரந்தர எடை இழப்பு என்பது உடலில் இருக்கும் கொழுப்புகள் வெளியேறும்பதுதான் நடக்கும். அதிக கலோரிகளை எரிப்பதன் மூலம் இது நிரந்தர எடை இழப்பிற்கும் வழிவகுக்கிறது. அதிக கலோரிகள் தொடர்ந்து எரிக்கப்படும் போது உங்கள் எடை தானாக குறையும்.

எச்சரிக்கை

எந்த ஆரோக்கிய பொருளாக இருந்தாலும் அதனை அதிகளவில் எடுத்துக்கொள்ளும் போது அது பக்கவிளைவுகளை நிச்சயம் ஏற்படுத்தும். அது பிளாக் காபிக்கும் பொருந்தும். அதிகளவு பிளாக் காபி குடிப்பது ஹைப்பர்டென்ஷனை ஏற்படுத்தும். மேலும் அதிகளவு காஃபைன் உங்களுக்கு பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். ஒருநாளைக்கு இரண்டு கப் பிளாக் காபி மட்டும் குடிப்பது நல்லது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About