படப்பிடிப்பில் லைட்மேனிடம் இருந்து பீடி வாங்கி அடித்த ரஜினி! நீண்டநாள் கழித்து வெளிவந்த தகவல்

சூப்பர் ரஜினிகாந்த் மிக எளிமையானவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இவரது இந்த பண்பினை பல முறை பல நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறோம். அப்படி ...

சூப்பர் ரஜினிகாந்த் மிக எளிமையானவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இவரது இந்த பண்பினை பல முறை பல நிகழ்ச்சிகளில் பார்த்திருக்கிறோம்.

அப்படி தான் மணிரத்னம் இயக்கத்தில் மம்முட்டியுடன் இவர் இணைந்து நடித்த தளபதி படத்தின் படப்பிடிப்பின் போது அங்கிருந்த லைட்மேனிடம் இருந்து பீடி கேட்டு வாங்கி அடித்துள்ளார்.

இதனை அப்படத்தில் க்ரூப் டான்ஸர்களுள் ஒருவராக நடனமாடிய டான்ஸ் மாஸ்டர் சுஜாதா சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதுகுறித்து கூறிய அவர், ஷூட்டிங் ப்ரேகில் ஒருமுறை, இருட்டில் டான்ஸர்ஸ் நாங்கள் எல்லாம் நின்று டீ குடிச்சிக்கிட்டிருந்தோம். அப்போ, எங்களுக்கு பின்னாலேயிருந்து ஒரு கை வந்து எங்களுக்கு இருந்த டீயை எடுத்தது. யாரென்று பார்த்தால், ரஜினி சார். நாங்க ஷாக் ஆகிட்டோம். ‘சார் நீங்கபோய் இந்த டீயை’னு கேட்டதுக்கு ‘அதனாலென்ன’னு கூலாக திருப்பி கேட்டார். அதேபோல, ஒரு லைட்மேனிடம் இருந்து பீடியை வாங்கி பத்த வைத்து அடிச்சாரு. ரஜினி சார் இவ்வளவு எளிமையா என்று மிரண்டுட்டோம் என கூறினார்.

டான்ஸ் மாஸ்டர் சுஜாதா ஈசன் படத்தின் வந்தனமாம் வந்தனம் பாடலின் மூலம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About