மீண்டும் சின்னத்திரைக்கு எப்போது வருவீர்கள்? நடிகை ராதிகாவின் பதில் இதோ

ரஜினி, கமல் என 80களில் முன்னணி கதாநாயகர்களாக இருந்த அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளவர் நடிகை ராதிகா. நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து...

ரஜினி, கமல் என 80களில் முன்னணி கதாநாயகர்களாக இருந்த அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளவர் நடிகை ராதிகா.

நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்ட பின்பு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தவர், பிறகு சின்னத்திரையிலும் கொடிக்கட்டி பறந்தார். இவரது சித்தி, வாணி ராணி சீரியல்கள் ரசிகர்களிடையே மிக பிரபலமானவை.

இந்நிலையில் இவர் கடைசியாக நடித்து வந்த சந்திரகுமாரி தொடர் சில தினங்களுக்கு முன்பு முடிவடைந்ததை தொடர்ந்து எப்போது மீண்டும் வேறொரு சீரியலுடன் சின்னத்திரைக்கு வருவீர்கள் என ரசிகர்கள் கேட்டு வந்தனர்.

அதற்கு தற்போது பதிலளித்துள்ள ராதிகா, உங்கள் அன்பிற்கு நன்றி. விரைவில் மீண்டும் தொலைக்காட்சிக்கு வருவேன். அதற்கான அறிவிப்பு சீக்கிரம் வெளியாகும் என கூறியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About